[X] Close

வடை, பஜ்ஜி சாப்பிட செய்தித்தாள் பயன்படுத்தினால் ஆபத்து: உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை


  • kamadenu
  • Posted: 15 May, 2019 08:23 am
  • அ+ அ-

வடை, பஜ்ஜி போன்ற எண்ணெய் பலகாரங்களை செய்தித்தாளில் வைத்து சாப்பிடுவதால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக உணவுபாதுகாப்புத் துறையினர் எச்சரித்துள்ளனர்.

டீ கடைகள், பேக்கரி, சாலை யோர உணவகங்களில் விற்கப் படும் வடை, பஜ்ஜி, போண்டா, பக்கோடா, பொரிக்கப்பட்ட மீன் ஆகியவற்றை செய்தித்தாள்களில் வைத்து தருகின்றனர். சிலர் எண்ணெய்யுடன் கூடிய பஜ்ஜி, போண்டாவை செய்தித்தாளில் அமுக்கி தேய்த்துவிட்டு சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். சூடான உணவு பொருட்களை செய்தித்தாளில் வைத்து விநியோகிக்கும்போது அச்சு மையானது உணவு பொருட்களின் மீது படிகிறது. அவ்வாறு அச்சு மை படிந்த உணவு பொருட்களை உண்ணும்போது, உணவே நஞ்சாகமாற வாய்ப்புள்ளது என எச்சரிக் கின்றனர் உணவு பாதுகாப்புத் துறையினர்.

இதுதொடர்பாக மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி விஜயலலிதாம்பிகை கூறிய தாவது:

சிறிய உணவகங்கள், தெருவோர கடைகளில் அதிகமாக செய்தித்தாள்களையே கை துடைக்க பயன்படுத்துகின்றனர். செய்தித்தாளின் அச்சு மையில் காரியம் என்ற ரசாயனம் உள்ளது. வடை, பஜ்ஜி போன்ற எண்ணெய் பலகாரங்களில் உள்ள எண்ணெயை குறைக்க செய்தித்தாள்களை பயன்படுத்துவதால், காரியமும் வயிற்றுக்குள் சென்றுவிடும். இதனால், வாந்தி, வயிற்றுவலி போன்றவை ஏற்படும். நாளடை வில் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, பலகாரங்களை வாழை இலையிலோ, சில்வர் தட்டிலோ வைத்து விநியோகிக்க வேண்டும் என விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். உணவு பொருட்களை செய்தித்தாளில் வைத்து யாரேனும் விற்பனை செய்தால் மாநில உணவுபாதுகாப்புத்துறையின் 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close