[X] Close

கோவை ரயில் நிலைய வளாகத்தில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்: கடந்த 4 மாதங்களில் 316 பேர் மீது நடவடிக்கை


500-4-316

  • kamadenu
  • Posted: 15 May, 2019 08:21 am
  • அ+ அ-

கோவை ரயில் நிலையத்தை அசுத்தப்படுத்திய 316 பேரிடமிருந்து கடந்த 4 மாதங்களில் ரூ.93,300 அபராதமாக வசூலிக்கப் பட்டுள்ளது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை ரயில் நிலையத்தை தினந்தோறும் 160 ரயில்கள் கடந்து செல்கின்றன. உள்ளூர், வெளியூர் பயணிகள் என சுமார் 17 ஆயிரம் முதல் 18 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், ரயில் நிலைய வளாகம் மற்றும் பிளாட்பாரங்களை சுத்தமாக வைத்திருக்க ரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதுதொடர்பாக பயணிகளிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் நெடுந்தொலைவு செல்லும் பயணிகள், ரயில் நிலையங்களிலேயே குளிப்பது, சமைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

ரயில்கள் நிற்கும்போது எச்சில் துப்புவது, குப்பைகளை வெளியில் வீசுவது போன்ற செயல்களிலும் சில பயணிகள் ஈடுபடுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதைக் குறைக்கும் வகையில், ரயில் நிலையங்களில் குப்பை போட்டாலோ, எச்சில் துப்பினாலோ, ரயில்வே சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தாலோ அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர, ரயில் நிலைய நடைமேடைகளில் குளிப்பது, சமைப்பது, சிறுநீர் கழிப்பது, ரயில் நிலைய சுவர்களில் போஸ்டர் ஒட்டுவது, எழுதுவது போன்றவற்றில் ஈடுபடுபவர்களுக்கும் ரூ.500 அபராதமாக விதிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: கோவை ரயில் நிலையத்தில் தினந்தோறும் 2.5 டன் குப்பை சேகரமாகிறது. இவை முறையாக தரம்பிரித்து அகற்றப்படுகிறது. அதேபோல, நடைமேடைகளும் சுத்தம் செய்யப்படுகின்றன. இருப்பினும், சில பயணிகள் குப்பைகளை குப்பை தொட்டியில் போடாமல் எறிந்துவிட்டு செல்வது, எச்சில் துப்புவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் பயணிகளுக்கு ரோந்து பணியில் உள்ள ரயில்வே பாதுகாப்பு படையினர் (ஆர்பிஎஃப்) அபராதம் விதித்து வருகின்றனர். அவ்வாறு கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரை 316 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, அவர்களிடமிருந்து மொத்தம் ரூ.93,300 வசூலிக்கப்பட்டுள்ளது” என்றனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close