[X] Close

ஓஎம்ஆரில் தொடரும் வழிப்பறி சம்பவங்கள்: போலீஸ் ரோந்து செல்ல வியாபாரிகள் வேண்டுகோள்


  • kamadenu
  • Posted: 15 May, 2019 08:19 am
  • அ+ அ-

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர், ஆலத்தூர், பையனூர் மற்றும் தண்டலம் ஆகிய பகுதிபழைய மகாபலிபுரம் சாலை யோரம் ஏராளமான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

கடந்த சில மாதங்களாக இச்சாலையில் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்லும் நபர்களிடமும், கடைகளுக்கு வரும் நபர்களை வழிமறித்தும் மர்ம நபர்கள் பணம், நகை உள்ளிட்ட பொருட்களை பறித்துச் செல்லும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனால், இரவு நேரங்களில் ஓஎம்ஆரில் செல்ல வாகன ஓட்டிகள் அச்சப்படும் நிலை உள்ளது.

இதை உறுதிப்படுத்தும் வகையில், கடந்த மாதம் தண்டலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபரை வழிமறித்து 2 பவுன் தங்கநகை, ரூ.26 ஆயிரம் ரொக்கம் ஆகியவை பறிக்கப்பட்டன. மேலும், மானாம்பதி செல்லும் சாலையில் ஆமூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை, வழிமறித்த மர்ம நபர்கள் கத்தியைக் காட்டி பணம், நகை உள்ளிட்டவற்றை பறிக்க முயன்றதாகவும். அப்போது, வேறு வாகனங்கள் வருவதை அறிந்து அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தண்டலம் அருகே இந்த சாலையோரம் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான ஹார்டுவேர்ஸ் கடையில் நுழைந்த திருநங்கைகளுடன் சேர்ந்த மர்ம கும்பல் ஒன்று, கடையில் இருந்த சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகவும், இதனால் சிறுவன் கடைக்கு வெளியே ஓடியதாகவும், அப்போது கடையில் இருந்து ரூ.85 ஆயிரம் ரொக்கத்தை அந்த கும்பல் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த காட்சிகள் அனைத்தும், கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பாதிவாகியுள்ளதால் அக்காட்சிகளை கொண்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை, திருப்போரூர் போலீஸார் தேடி வருகின்றனர். ஓஎம்ஆரில் தொடரும் வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்களால், இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, போலீஸார் ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண் டும் என வியாபாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close