[X] Close

டபிள்யூடிஓ-வை வலுப்படுத்த 17 நாடுகள் உறுதி


17

  • kamadenu
  • Posted: 15 May, 2019 08:03 am
  • அ+ அ-

உலக வர்த்தக அமைப்பை (டபிள்யூடிஓ) வலுப்படுத்த 17 வளரும் நாடுகள் உறுதியளித்துள்ளன. டெல்லியில் இரண்டு நாள்கள் நடைபெற்ற டபிள்யூடிஓ அமைப்பின் அமைச்சர்கள் இடையிலான கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் டபிள்யூடிஓ கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள 22 நாடுகள் கலந்து கொண்டன. அதில் டபிள்யூடிஓ அமைப்பின் சமரச தீர்ப்பு அமைப்பில் உறுப்பினர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும் உறுதி மேற்கொள்ளப்பட்டது. அத்துடன்ஒருங்கிணைந்த வளர்ச்சியை எட்டுவதெனவும் முடிவு எட்டப்பட்டது. இந்த கூட்டத்தின் முடிவில் எட்டப்பட்ட தீர்மானத்தில் 17 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. மற்ற5 நாடுகள் கூட்டத்தில் எட்டப்பட்ட 13 அம்சங்களுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளன.

டபிள்யூடிஓ அமைப்பில் உள்ள சமரச தீர்வு அமைப்பானது, உறுப்பு நாடுகளுக்கு பாதுகாப்பு மற்றும் நாடுகளிடையிலான வர்த்தகத்துக்கு முட்டுக்கட்டையாக உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சமரச தீர்வு அமைப்பின் செயல்பாடு இந்த ஆண்டுடிசம்பருக்குப் பிறகு முடங்கிப் போக அனுமதிக்கக் கூடாது என்றும் முடிவு செய்துள்ளன.

டபிள்யூடிஓ சமரச தீர்வு அமைப்பில் காலியாக உள்ள உறுப்பினர் பதவிகளை நிரப்புவது எனவும், பிரச்சினைகளுக்கு தொடர்ந்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது என்றும் முடிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டபிள்யூடிஓ சமரச தீர்வு அமைப்பில் உறுப்பினர்களை நியமிப்பதற்கு உறுப்பு நாடுகளில் ஒன்றான அமெரிக்கா முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இந்த அமைப்பில் குறைந்தபட்சம் 3 பேர் இருந்தால் மட்டுமே செயல்பட முடியும். இல்லையெனில் டிசம்பருடன் காலாவதியாகும் இந்த அமைப்பின் செயல்பாடு அதன் பிறகு முடங்கிப் போகும்.

இப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று மாநாட்டின் தொடக்க நாளன்றே இந்தியா வலியுறுத்தியிருந்தது. அதேபோல வளரும் நாடுகளுக்கு அளிக்கப்படும் சிறப்பு மற்றும் மாறுபட்ட சலுகைகளைத் தொடர்ந்து அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

அதேபோல டபிள்யூடிஓ வகுத்துள்ள விதிமுறைகளை உறுப்பு நாடுகள் கண்டிப்பாக பின்பற்றுவதோடு எதிர்காலத்தில் இந்த அமைப்பு வகுக்கும் திட்டங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியது. அதேசமயம் ஓரளவு வளர்ச்சியடைந்த நாடுகளின் (எல்சிடி) பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வளரும் நாடுகளுக்கு டபிள்யூடிஓ அமைப்பில் வழங்கப்படும் சலுகை மற்றும் மாறுபட்ட சலுகைகளில் ஒன்றுதான் வேளாண் பொருள்களுக்கு மானியம் அளிப்பதாகும். இத்தகைய மானியத்தை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்று வளர்ச்சியடைந்த நாடுகள் வலியுறுத்துகின்றன. ஆனால் இந்தியா போன்ற வளரும் நாடுகள் இதில் முற்றிலும் மாறுபட்ட கருத்தை வலியுறுத்தி வருகின்றன. நேற்று எட்டப்பட்ட முக்கியமான தீர்மானங்களில் ஒருங்கிணைந்த வளர்ச்சி மிக முக்கியமான விஷயமாக உணர்த்தப்பட்டது.

வேளாண் துறையை பொருத்தமட்டில் சலுகை அளிப்பதற்கு ஏற்ற வகையில் கொள்கை மாற்றங்களை உருவாக்க வேண்டும் என்றும் அதை முன்னுரிமை அடிப்படையில் விரைவாக செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close