[X] Close

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான திருநாவுக்கரசு வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை


  • kamadenu
  • Posted: 15 May, 2019 07:47 am
  • அ+ அ-

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசின் சின்னப்பம்பாளையம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நேற்று மாலை சோதனை நடத்தினர்.

பாலியல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண், பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக திருநாவுக்கரசு (27), சபரி (எ) ரிஷ்வந்த் (25), சதீஸ் (28), வசந்தகுமார் (24) ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். பல்வேறு தரப்பினர், கட்சியினர் கோரிக்கைக்குப்பின்பு இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது.

சிபிசிஐடி அதிகாரிகள் விசாரித்து வந்த நிலையில், வழக்கை சிபிஐ-யிடம் தமிழக அரசு ஒப்படைத்தது. கடந்த சில நாட்களாக சிபிஐ அதிகாரிகள் ரகசியமாக பொள்ளாச்சியில் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் குறிப்பிட்ட காலகட்டத்தில் சிகிச்சை பெற்ற வெளிநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளின் பெயர் பட்டியலை சிபிஐ அதிகாரிகள் பெற்றுச் சென்றனர்.

நேற்று மதியம் பொள்ளாச்சி சின்னப்பம்பாளையத்தில் உள்ளதிருநாவுக்கரசு வீட்டில், சிபிஐ ஆய்வாளர் கருணாநிதி தலைமையிலான அதிகாரிகள், கிராம நிர்வாகஅலுவலர் சம்பத்குமார் முன்னிலையில் சோதனை நடத்தினர்.

சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக, திருநாவுக்கரசின் வீட்டருகே வசிப்பவர்களிடம் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், அவர்களது பெயர், கதவு எண், வீட்டுமுகவரி, பாலியல் குற்றச் சம்பவத்தின்போது ஏதேனும் சத்தம் கேட்டதா என விசாரணை நடத்தினர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close