[X] Close

புதுக்கோட்டை முன்னாள் எம்.பி. ராஜா.பரமசிவம் காலமானார்


  • kamadenu
  • Posted: 15 May, 2019 07:40 am
  • அ+ அ-

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மேற்கு ஊராட்சி குருவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா.பரமசிவம் (57). 1998-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் புதுக்கோட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், அதன்பிறகு அக்கட்சியின் மாவட்டச் செயலாளராகவும் பதவி வகித்தார்.

1999-ல் மத்தியில் ஆட்சி கலைக்கப்பட்டதால் 13 மாதங்கள் மட்டுமே பதவியில் இருந்த இவர், சில ஆண்டுகளுக்குப் பிறகு உட்கட்சி விவகாரத்தால் திமுகவுக்குச் சென்றார். பின்னர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். அதன்பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டபோது ஜெ.தீபா அணியில் சேர்ந்தார்.

நெடுவாசல் ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு போராட்டத்திலும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்திலும் ஈடுபட்டார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு சொந்த ஊரான குருவாடியில் இன்று (மே 15) நடைபெறுகிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close