[X] Close

வாக்கு எண்ணிக்கையின்போது முகவர்கள் பேனா, பேப்பர் எடுத்துச் செல்ல தடை கூடாது: தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு


  • kamadenu
  • Posted: 15 May, 2019 07:42 am
  • அ+ அ-

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவிடம் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கடந்த தேர்தல்களின்போது, வாக்கு எண்ணிக்கை மையங் களில் வேட்பாளர்களின் முகவர்கள்பேனா, வெற்று வெள்ளைத்தாள், பதிவான வாக்குகளை குறிக்கும் வகையில் பதிவு செய்யப்பட்ட தாள்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் அளிக்கப் பட்ட 17 சி படிவம் ஆகியவற்றை எடுத்துச் செல்வார்கள். இவை தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும்.

ஆனால், இந்த தேர்தலில், பல்வேறு தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் வரும் முகவர்கள் பேனா, வெள்ளைத்தாள் உள்ளிட்ட எந்த பொருட் களையும் கொண்டுவரக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளனர். இந்ததடை தேவையற்றது. தேர்தல்ஆணையம் வெளியிட்டுள்ள வாக்கு எண்ணிக்கை முகவர் களுக்கான கையேட்டின்படி, வாக்கு எண்ணிக்கை மையத்துக் குள் கைபேசி எடுத்துச் செல்வது மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளது. அதை முகவர்கள் எப்போதும் மதித்து செயல்பட்டு வருகின்றனர்.

பேனா, வெள்ளைத்தாள் உள்ளிட்டவை பதிவான வாக்குகளை குறித்துக் கொள்வதற்காக முகவர் களுக்கு அவசியமான ஒன்றாகும். அதுபோல் 17-சி படிவமும் பதிவானவாக்குகளை சரிபார்க்க அவசியமானதாகும். எனவே, தாங்கள் இதில் தலையிட்டு, வாக்கு எண்ணிக்கை முகவர்கள் பேனா, வெள்ளைத்தாள் மற்றும் 17 சி படிவம் கொண்டு செல்ல அனுமதிக்க அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close