[X] Close

தவறான செய்திகளை பரப்புவதால் தினகரன் பிரச்சாரத்துக்கு தடை விதிக்க வேண்டும்: தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்


  • kamadenu
  • Posted: 15 May, 2019 07:44 am
  • அ+ அ-

தவறான செய்திகளை மக்கள்மத்தியில் பரப்பும் டிடிவி தினகரனின் தேர்தல் பிரச்சாரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக மனு அளித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவை சந்தித்து, அதிமுகவழக்கறிஞர் பாபு முருகவேல்அளித்த புகாரில் கூறியிருப்ப தாவது:

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் நடந்து வருகிறது. சூலூரில் டிடிவி தினகரன் கடந்த 13-ம் தேதி மாலை பேசும்போது, முதல்வர், துணை முதல்வரை விமர்சித்து, தனிநபர் தாக்குதலை மேற்கொண்டார். ஒருமையிலும் பேசுகிறார். உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துமுடித்து வைக்கப்பட்ட வழக்குகளின் தீர்ப்புகளை விமர்சித்துள்ளார். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி சிறையில் இருக்கும் சசிகலாவின் செயலை நியாயப்படுத்தும் விதமாகவும், தவறான தண்டனையை உச்ச நீதிமன்றம் தந்ததாகவும் பொய் செய்தியை மக்கள் மத்தியில் பரப்புகிறார்.

பிரச்சாரத்தின் போது, வழியில் வந்த ஆம்புலன்ஸ் வாகனங்களில் ஆள் இருக்கிறார்களா என்று கேட்டு, மனிதாபிமானம் இல்லாமல், நோயாளிகளை கொச்சைப்படுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளார். எனவே, முக்கிய சாலைகளில் அவர் பிரச்சாரம் செய்வதற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும். தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்பட்டு வரும் தினகரன் மீது, நடத்தை விதிகளின்படியும், இந்திய தண்டனை சட்டப்படியும் நடவடிக்கை எடுத்து, தொடர்ந்து தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close