[X] Close

சினிமாவில் பேசுவதுபோல கமல்ஹாசன் பேசிவிட்டார்: டிடிவி தினகரன் கருத்து


  • kamadenu
  • Posted: 15 May, 2019 07:34 am
  • அ+ அ-

சினிமாவில் பேசுவதுபோல கமல்ஹாசன் பேசிவிட்டார் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

அரவக்குறிச்சியில் அமமுக வேட்பாளர் சாகுல் ஹமீதை ஆதரித்து தினகரன் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

இந்திரா காந்தியை ஒரு சீக்கியர்தான் சுட்டுக் கொன்றார். ஆனால், மன்மோகன் சிங்கை சோனியா காந்தி பிரதமராக்கினார். ஒரு குழுவாக செயல்படுபவர்கள் தவறு செய்யும்போது அதில் ஜாதி, மதம் பார்க்கக் கூடாது. நாதுராம் கோட்சே என்ற பெயரேரஷ்ய பெயரைப் போல உள்ளது. அவர் காந்தியை சுட்டுக் கொன்றதற்கு கமல்ஹாசன் ஏன் இந்து தீவிரவாதி எனக் குறிப்பிடுகிறார்.

கமல்ஹாசன் சினிமாவில் பேசுவதுபோல பேசிவிட்டார். அரசியல்வாதிகள் எந்த மதத் தையும், எந்த மதத்தினரையும் புண்படுத்தும் விதமாக பேசக்கூடாது. கமல்ஹாசனின் நாக்கைவெட்டுவேன் என்று அமைச்சர் கூறியது தவறில்லையா?ஒரு கட்சியில் இருந்து எம்எல்ஏ,அமைச்சர் என பதவிகளை பெற்றுவிட்டு துரோகம் செய்கின்றனர். மற்ற இடங்களில் ஒரு துரோகி. இங்கு இரு துரோகிகளை தோற் கடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close