[X] Close

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் வழங்கப்படும் பாதுகாக்கப்பட்ட குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துங்கள்: பொதுமக்களுக்கு வாரிய மேலாண்மை இயக்குநர் வேண்டுகோள்


  • kamadenu
  • Posted: 15 May, 2019 07:23 am
  • அ+ அ-

தமிழகத்தில் விநியோகிக்கப்படும் பாதுகாக்கப்பட்ட குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் சி.என்.மகேஸ்வரன், பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க 556 கூட்டுக் குடிநீர்திட்டங்கள் தற்போது பராமரிக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்கு நாள்தோறும் 2,146 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. தற்போது தமிழ்நாட்டின் மழை அளவு வழக்கத்தைவிட 69 சதவீதம் குறைந்துள்ளதால் இந்த ஆண்டு சராசரியாக 1,856 மில்லியன் லிட்டர் (86 சதவீதம்) தண்ணீர் தரப்படுகிறது.

அனைத்து குடிநீர் திட்டங்களில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் கடைக்கோடி குடியிருப்புகள் வரை, வரையறுக்கப்பட்ட அளவில் சென்றடைவதை உறுதிசெய்ய, மாநிலம் முழுவதும் 258 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குடிநீர் குழாய்களில் ஏற்படும் கசிவுகள், உடைப்புகள், வீணாகும் குடிநீர் பற்றி சென்னையில் உள்ளதமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியதலைமை அலுவலகத்தில் செயல்படும் சிறப்புக் குறைதீர்க்கும் குழுவிடம் 94458 02145 என்ற செல்போன் எண்ணில் தொடர்புகொண்டு பொதுமக்கள் தெரிவிக்கலாம். குடிநீரின் தரத்தை அறிந்து கொள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள குடிநீர் தரப் பரிசோதனைக் கூடத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பிற துறைகளுக்கு நில நீர் ஆதாரம், மழைநீர் சேகரிப்பு பற்றிய தகவல் தருதல், ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க இடம் தேர்வு செய்தல் போன்ற பணிகள் அந்தந்த மாவட்ட அளவில் உள்ள வாரியத்தைச் சேர்ந்த நில நீர் வல்லுநர்களால் மேற்கொள்ளப்படுகின்றன.

தமிழகம் முழுவதும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு முறைகளை செயல்படுத்தத் தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளை தமிழ்நாடுகுடிநீர் வடிகால் வாரிய அளித்து வருகிறது. எனவே, குடிநீரை பொதுமக்கள் அனைவரும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close