[X] Close

கோவையில் கஞ்சா வியாபாரிக்கு நேர்ந்த கதி


  • kamadenu
  • Posted: 14 May, 2019 21:33 pm
  • அ+ அ-

-Muthukumar R_50162

கோவையின் பல்வேறு காவல்நிலையங்களில் கஞ்சா விற்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்ட விஜயன் என்ற நபர் ரத்த வெள்ளத்தில் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 

கேரள மாநிலத்தைச் சேர்ந்த விஜயனுக்கு வயது 45.

 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக கோவை வந்தார். இங்கு பிளக்ஸ் பேனர் கட்டும் வேலை பார்த்து வந்தார். வெரைட்டிஹால் ரோட்டில் உள்ள சி.எம்.சி. காலனியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தங்கினார்.

 

இவர் மீது கோவையின் பல்வேறு காவல் நிலையங்களில் கஞ்சா விற்பனை வழக்கு நிலுவையில் உள்ளது. வழக்கம்போல் நேற்று இரவு அதே பகுதியில் படுத்தார். இன்று காலை அந்த வழியே சென்ற சிலர் பார்த்தபோது அங்கு விஜயன் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தார். அதிர்ச்சியடைந்த அந்த பகுதிமக்கள் இது குறித்து வெரைட்டிஹால் ரோடு போலீசில் புகார் செய்தனர்.

 

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது விஜயன் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்திருப்பது தெரியவந்தது. உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

 

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள். குடியிருப்பு உள்ள பகுதியில் இந்தப் படுகொலை நடந்ததால் அங்கு பீதி நிலவி வருகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close