[X] Close

தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு அனல் காற்று: வானிலை ஆய்வு மையம்


3

  • kamadenu
  • Posted: 14 May, 2019 15:29 pm
  • அ+ அ-

தமிழகத்தில் நாளை முதல் அடுத்த மூன்று தினங்களுக்கு தமிழகத்தின் சில மாவட்டத்தில் அனல் காற்று வீச வாய்ப்புள்ளது. வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

குமரிமுனைப் பகுதிகளில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகவும் வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் 6 செ.மீ. மழையும், நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் 4 செ.மீ.  மழையும், திண்டுக்கல் நத்தத்தில் 3 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

மேலும், கோவை பெரியநாயக்கன் பாளையம், ஈரோடு, மணப்பாறை உள்ளிட்ட இடங்களில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று முதல் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் அனல் காற்று வீசும் என்றும் தெரிவித்திருந்த நிலையில் இன்று அனல் காற்று வீச வாய்ப்பு இல்லை எனவும் நாளை முதல் அடுத்த மூன்று தினங்களுக்கு அனல் காற்று வீசும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 29 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close