[X] Close

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்


  • kamadenu
  • Posted: 14 May, 2019 12:49 pm
  • அ+ அ-

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என, மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

"சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே" என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சமீபத்தில் பேசியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கமல்ஹாசனின் இந்தப் பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசியச் செயலாளர் எச்.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் கண்டனம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக நேற்று (திங்கள்கிழமை) தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்துதான் முதல் தீவிரவாதி என, சிறுபான்மையினர் வாக்குகளைப் பெறுவதற்காக நடிக்கும் கமல்ஹாசனின் நாக்கை ஒருகாலத்தில் அறுக்கத்தான் போகிறார்கள்" என தெரிவித்திருந்தார்.

இதற்கு, மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் அருணாச்சலம் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அரசியல் மாண்பும், தனி மனித கண்ணியமும் துளியுமின்றி, சட்ட விரோதமாக, "மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நாக்கை அறுக்க வேண்டும்" என்று கூறுவது கடுமையான கண்டனத்திற்குரியது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினராகவும், பால்வனம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சித் துறை அமைச்சராகவும் இருக்கும் ராஜேந்திர பாலாஜி, தன் பதவிப் பிரமாணத்தின் போது, எடுத்த உறுதிமொழியை மீறும் வகையில், நடந்துகொண்டதற்காக, அவர் வகிக்கும் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close