[X] Close

மக்களவைத் தேர்தல் முடிவுறாத நிலையில் ஸ்டாலின் தன்னை மாற்றிக்கொண்டார்: முதல்வர் பழனிசாமி விமர்சனம்


  • kamadenu
  • Posted: 14 May, 2019 11:32 am
  • அ+ அ-

மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிவுறாத நிலையில் ஸ்டாலின் தன் முடிவை மாற்றிக்கொண்டார் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட வேலம்பாடி, பள்ளப்பட்டி ஆகிய இடங்களில் அதிமுக வேட்பாளார் வி.வி.செந்தில்நாதனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை அன்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்துப் பேசியதாவது :-

"திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி, தன்னை வெற்றி பெறச் செய்த தொகுதி மக்களுக்கு ஏதாவது செய்தாரா, இல்லை. இவருக்கு வாக்களித்து,வெற்றி பெறச் செய்த மக்களுக்கு துரோகம் இழைத்தவர். இவருக்கு இந்த தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் காங்கிரஸ் கட்சி அறிவிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிதம்பரம் தெரிவித்திருக்கிறார். ஆனால் இன்றைய நிலைமை என்ன?

மு.க.ஸ்டாலினை தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் சந்தித்துப் பேசியிருக்கிறார். மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிவுறாத நிலையில் ஸ்டாலின் தன்னை மாற்றிக் கொண்டார்".

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close