[X] Close

எதிர்க்கட்சியாக இருந்தபோதும் திமுக வன்முறையைக் கைவிடவில்லை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு


  • kamadenu
  • Posted: 14 May, 2019 08:57 am
  • அ+ அ-

திமுக எதிர்க்கட்சியாக இருந்த போதும் வன்முறையைக் கைவிட வில்லை என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

திருப்பரங்குன்றம் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.முனியாண்டியை ஆதரித்து துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் நேற்று மாலை வலையங்குளத்தில் பேசியதாவது:

தமிழகத்தில் காங்கிரஸ், திமுக ஆட்சி செய்துள்ளன. ஆனால் பொற்கால ஆட்சி நடந்தது எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியில்தான். மக்களுக்காக எண்ணற்ற தொலைநோக்குத் திட்டங்களையும், மக்கள் நல்வாழ்வுக்கான வளர்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்தி இந்த நாட்டுக்காக தன்னையே அர்ப்பணித்தவர் ஜெயலலிதா.

அவரது வழியில் பொங்கல் பரிசுப் பொருட்களோடு ஆயிரம் ரூபாய் வழங்கினோம். தமிழகத்தில் 60 லட்சம் மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ளனர். அவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கிக் கொண்டிருந்தோம்.

அதற்கு திமுகவினர் உயர் நீதிமன்றத்தில் தடை பெற்றனர். திமுக ஆட்சியில் எந்த சாதனையும் செய்யாதவர்கள் அதிமு கவின் திட்டங்களுக்கு தடை பெறுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். தேர்தல் முடிந்த பிறகு உயர் நீதிமன்றத் தடையை நீக்கி ரூ.2 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும்.

தமிழகத்துக்கு திமுகவினர் எதுவுமே செய்யவில்லை. ஐந்து ஆண்டுகள் மின்சாரப் பற்றாக்குறையைத் நீக்க முடியாத ஆட்சியாக திமுக செயல்பட்டது. திமுக ஆட்சிக் காலத்தில் எங்கு பார்த்தாலும் வன்முறை கலாச்சாரம். மதுரையில் என்ன நடந்தது என உங்களுக்கு நன் றாகவே தெரியும்.

திமுக தலைவர் ஸ்டாலின், மே 23-ம் தேதி அதிமுக ஆட்சி இருக்காது எனப் பிரச்சாரம் செய்கிறார். அவருக்கு முதல்வர் பதவி மீது தீராத ஆசை. அவர் எந்தக் காலத்திலும் முதல்வர் ஆகவே முடியாது.

தமிழர்களின் வீரவிளையாட் டான ஜல்லிக்கட்டுக்கு திமுக-காங்கிரஸ் ஆட்சியில்தான் பிரச்சி னை வந்தது. ஜல்லிக்கட்டு விளை யாட்டுக்கு அனுமதி பெற்றுத்தந்தது அதிமுக அரசு. தமிழகத்துக்கு பிரச்சினைகள் வந்தபோதெல்லாம் தீர்த்து வைக்கும் அரசாக அதிமுக உள்ளது. தீர்க்க முடியாத அரசாக திமுக, காங்கிரஸ் அரசு இருந்தது.

இன்றைக்கு திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோதும் வன்முறையைக் கைவிடவில்லை. எனவே, தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ அதிமுவை வேட்பாளரை ஆதரியுங்கள்.

இவ்வாறு துணை முதல்வர் பேசினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close