[X] Close

கஜா புயலின் கோரத் தாண்டவதால் மரங்கள் சேதம்: ‘பழம்’ விளைவித்த மக்கள் ‘சுளை’க்கு ஏங்கும் அவலம்


  • kamadenu
  • Posted: 14 May, 2019 08:50 am
  • அ+ அ-

கஜா புயல் பேரழிவால் புதுக் கோட்டை மாவட்டத்தில் ஏராளமான பலா மரங்கள் சேதமடைந்ததால், பலாப் பழம் விளைவித்த மக்களே பலா சுளைக்கும் ஏங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகாடு, மாங்காடு, கொத்த மங்கலம், கீரமங்கலம், செரியலூர், பனங்குளம், புள்ளான்விடுதி, நெடுவாசல், மேற்பனைக்காடு, சேந்தன்குடி உள்ளிட்ட கிராமங்களில் லட்சக்கணக்கான பலா மரங்கள் இருந்தன.

இப்பகுதியில் விளையும் பலாப் பழத்தின் சுளை சுவை மிக்கதாக இருக்கும் என்பதால் சந்தையில் இதற்கு நல்ல வரவேற்பு இருந் தது. இங்கு விளையும் பழங்கள் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் விற்பனை செய் யப்பட்டது.

மார்ச் முதல் ஜூன் மாதம் வரை பலா விளைச்சல் அதிகளவில் இருக்கும். வடகாடு, மாங்காடு, புளிச்சங்காடு கைகாட்டி, கீரமங்கலம் போன்ற இடங்களில் உள்ள மண்டிகள் மூலம் விவசாயிகளிடம் இருந்து நாளொன்றுக்கு அதிகபட்சமாக 100 டன் வரை பழங்களை கொள்முதல் செய்து விற்பனை செய்யப்படும். இதன் மூலம் பல லட்சம் ரூபாய்க்கு பணப்பரிமாற்றம் நடைபெறும்.

விளைச்சல் குறைவாக இருக்கும்போது ரூ.100-க்கு விற்கும் பழம், விளைச்சல் அதிகரிக்கும்போது ரூ.10-க்கு கூட விற்பனை செய்யப்படும். இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சுழற்றிய கஜா புயலின் கோரத் தாண்டவத்தால் பலா மரங்கள் கடுமையாக சேதம் அடைந்தன.

ஊருக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக கிளைகள் இல்லாத மரங்கள் மட்டுமே உள்ளன. அதில் காய்த்த சொற்ப எண்ணிக்கையிலான பழங்கள் சந்தைக்கு வருகின்றன. போதிய விளைச்சல் இல்லாததால் உள்ளூர் மக்களே பலாச் சுளைக்கு ஏங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து விவசாயி மாங்காடு ராமசாமி கூறியது:

ஆலங்குடி வட்டாரத்தில் வீடுகள்தோறும் பலா மரங்கள் இருந்ததால் ஒவ்வொருவரது குடும்பத்தின் பொருளாதாரத் துக்கும் பலா மரங்கள் முக்கிய பங்களிப்பை கொடுத்து வந்தன. புயலால் ஏராளமான பலா மரங்கள் சேதம் அடைந்துவிட்டன. இதனால் இப்பகுதி மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளனர்.

புயலுக்கு சாய்ந்த மரங்களுக்கு அரசு முறையாக நிவாரணத் தொகை கொடுக்காமல் ஏமாற்றிவிட்டது. ஆசைக்கு சாப்பிடக்கூட பலாச் சுளை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், மீண்டும் பலா மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close