[X] Close
 

தூத்துக்குடி சம்பவம் குறித்து போலீஸ் உடையில் கருத்து தெரிவித்த டிவி நடிகை நிலானி மீது வழக்கு


tv-actor-sterlite-protest

நிலானி

  • kamadenu
  • Posted: 24 May, 2018 11:06 am
  • அ+ அ-

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து போலீஸ் சீருடை அணிந்து பேசியதாக சின்னத்திரை நடிகை மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து பல்வேறு வகையான கண்டனங்கள் மற்றும் வருத்தங்களை பதிவு செய்யும் வகையில் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வருகின்றன. அந்த வகையில் போலீஸ் சீருடை அணிந்த பெண் ஒருவரின் பேச்சு, வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த வீடியோவில், “காவல்துறை சீருடையை நான் அணிந்திருப்பதை கேவலமாக நினைக்கிறேன். துப்பாக்கிச் சூடு தற்செயலானது இல்லை. திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. இலங்கையில் நடந்தது தற்போது தமிழ்நாட்டில் நடந்துள்ளது” என 7 நிமிடங்கள் அந்த வீடியோ காட்சி இருக்கிறது. 

முதலில் ஒரு காவல் அதிகாரி இவ்வாறு பேசியிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. காவல் அதிகாரியே இப்படி பேசியிருக்கிறாரே என்ற பரபரப்பும் ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று காலையில் ரிஷி என்பவர் சென்னை வடபழனி காவல் நிலையத்தில் ஒரு புகார் ஒன்றை கொடுத்தார். அதில், அந்த வீடியோ காட்சியை குறிப்பிட்டு, அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். அதன் பின்னர் தான் பேசியது காவல் அதிகாரி இல்லை, சென்னையில் வசிக்கும் சின்னத்திரை நடிகை நிலானி என்பது தெரியவந்தது.

நேற்று முன்தினம் காவல் உதவி ஆணையர் வேடத்தில் நிலானி ஒரு காட்சியில் நடித்திருக்கிறார். அந்த நேரத்தில் தூத்துக்குடி சம்பவம் குறித்து அறிந்ததும், அதே போலீஸ் சீருடையில் தனது கருத்தை செல்போனில் பதிவு செய்து, சமூக வளைதளங்களில் வெளியிட்டுள்ளார். 

இந்நிலையில், அவரது பேச்சு வன்முறையைத் தூண்டும் வகையில் இருப்பதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் ஆள்மாறாட்டம், காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்துதல், வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுதல், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தவறான கருத்துக்களை பரப்புதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் நிலானி மீது வடபழனி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close