[X] Close

ஒருத்தனாவது சாவணும்: ஸ்டெர்லைட் போராட்ட களத்தின் அதிர்ச்சி வீடியோ


at-least-1-should-die-cop-on-video-of-sterlite-protests-that-killed-12

  • பாரதி ஆனந்த்
  • Posted: 23 May, 2018 09:17 am
  • அ+ அ-

ஸ்டெர்லைட் போராட்டக் களத்தில் ஏஎன்ஐ செய்தி நிறுவனம் எடுத்த வீடியோ ஒன்று அதிர்ச்சியூட்டுவதாக அமைந்துள்ளது.

போராட்டக்காரர்கள் அங்கும் இங்கும் ஓட போலீஸ் வேன் மீது காவலர் ஒரு துப்பாக்கியுடன் ஏறுகிறார். அப்போது பின்னால் இருந்து ஒரு நபரின் குரல் கேட்கிறது. அந்த நபர், "ஒருத்தனாவது சாவணும்" என்கிறார். அவர் அவ்வாறு கூறி முடிக்க, வேன் மீது ஏறிய காவலர் குறி பார்த்து சுட, துப்பாக்கியிலிருந்து ஒரு குண்டு பாய்கிறது. அந்த குண்டு யார் மீதும் பட்டு உயிர்ச் சேதம் ஏற்படுத்தியதா? என்பது தெரியவில்லை.

ஆனால், ஸ்டெர்லைட் கலவரத்துக்கு காவல்துறையே காரணம். கலவரத்தைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்தும்போது வானத்தை நோக்கிச் சுட்டு மக்களை அச்சுறுத்தலாம், கால்களில் சுடலாமே தவிர நெஞ்சு, தலை, வாய் என்று குறிவைத்து சுடக்கூடாது என மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் கூறிவரும் நிலையில், "ஒருத்தனாவது சாவணும்" என்ற அந்த குரல் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

12 பேர் பலி:
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நேற்று நடந்த ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்தின்போது பயங்கர வன்முறை வெடித்தது. போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயி ரிழந்தனர். தடியடி, கல்வீச்சு சம்பவங்களில் 12 போலீஸார் உட்பட 75-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வாகனங்கள் கொளுத்தப்பட்டன. தூத்துக்குடி நகரமே கலவரக் காடாக மாறியது. இன்னமும் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

வீடியோவைக் காண கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யவும்:

https://twitter.com/ANI/status/998964917905453057?ref_src=twsrc%5Etfw

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close