[X] Close

சென்னை - சேலம் இடையே  பசுமை வழிச் சாலையால் மக்களுக்கு பயன் இல்லை:  சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் பியூஷ்மனுஷ் குற்றச்சாட்டு 


chennai-salem-green-road-piyush-manush

கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 18 May, 2018 12:30 pm
  • அ+ அ-

சென்னை - சேலம் இடையே அமைய உள்ள 8 வழி பசுமைச் சாலைத் திட்டத்தால் மக்களுக்கு பயன் இல்லை என்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் பயன்பெறும் என்று சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் பியூஷ்மனுஷ் தெரிவித்துள்ளார். 

சென்னை - சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் பசுமை 8 வழிச் சாலைத் திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டுகின்றன. இந்த வழித் தடத்தில் சுமார் 230 கி.மீ., தொலைவுக்கு வனப் பகுதிகளை அழித்து, சாலையை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதற்கு, திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் சேலத்தைச் சேந்த சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் பியூஷ் மனுஷ் தலைமையிலான குழுவினர் திருவண்ணாமலைக்கு வந்துள்ளனர். அவர்கள், தி.மலை அடுத்த காஞ்சி அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தில் நேற்று கிராம மக்களை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது அவர்கள், வனப்பகுதி மற்றும் விவசாய நிலங்கள் அழிக்கப்படுவதால் ஏற்படப்போகும் பாதிப்பு மற்றும் இரும்புத் தாது அதிகம் உள்ள கஞ்ச மலை (சேலம்), கவுத்தி மலை (தி.மலை) ஆகியவற்றுக்கு ஏற்படப்போகும் ஆபத்து குறித்து எடுத்துரைத்தனர். 

இது குறித்து பியூஷ்மனுஷ் கூறும்போது, “சென்னை - சேலம் இடையே 8 வழிச் சாலை அமைப்பதற்கான முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இது தற்கொலைக்கு சமம். இந்த திட்டத்தின் நோக்கம் குறித்து தமிழக மக்களிடம் விளக்கம் அளிக்க வேண்டும். இந்த திட்டத்தால் எந்தப் பயனும் இல்லை. கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் பயன்பெறப்போகிறது. காடுகளை, நிலங்களை அழிப்பதால் விவசாயிகள், விலங்குகள், பறவைகள் அழியப்போகிறது” என்றார். 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close