[X] Close
 

வாடிப்பட்டி மீனாட்சியம்மாளுக்கு 104 வயது: 4 தலைமுறையினர் இணைந்து கொண்டாடினர்


104-centenarian-birthday

மீனாட்சியம்மாள்

  • kamadenu
  • Posted: 17 May, 2018 11:34 am
  • அ+ அ-

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் வசிக்கும் மூதாட்டியின் 104-வது பிறந்த நாளை, அவரது குழந்தைகள் முதல் கொள்ளுப் பேரன்கள் வரை 100 பேர் இணைந்து கொண்டாடினர்.

வாடிப்பட்டி அருகேயுள்ள நீரேத்தான் கிராமத்தை சேர்ந்தவர் ராஜுபிள்ளை. தையல் தொழிலாளியான இவர் தி.க.வில் முன்னோடியாக திகழ்ந்தவர். இவரது மனைவி மீனாட்சியம்மாள். ராஜுப்பிள்ளை 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

மீனாட்சியம்மாள், தனது 104-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். இதற்கான ஏற்பாடுகளை அவரது மகன், மகள், பேரன், கொள்ளுப்பேரன்கள் என 100 பேர் இணைந்து செய்தனர்.

மீனாட்சி அம்மாளின் மகன் மனோகரன்(60) கூறியது: எனது பெற்றோருக்கு 5 ஆண், 2 பெண் குழந்தைகள் நான் 6-வது மகன். ஒரு மகன், மகள் இறந்துவிட்டனர். அப்பா இறந்து 20 ஆண்டுகளாகிவிட்டன. அம்மாவின் தங்கைக்கு 85 வயதாகிறது. அம்மா 4-வது தலைமுறையான கொள்ளுப் பேரனை பார்த்துவிட்டார்.  இன்னும் ஓராண்டு வாழ்ந்தால் எள்ளுப்பேரன், பேத்தியை பார்த்துவிடுவார். 

தாயார் 104 வயதை தொட்டு விட்டார். பழைய குடும்ப அட்டையில் இதற்கான சான்று உள்ளது. அவரது திருமணத்தின்போது இருந்த வயது, சகோதரியின் வயது, குழந்தைகள் பிறந்ததன் அடிப்படையில் கணக்கிட்டதில் 104-ஐ தொட்டுள்ளார். இதுவரை மருத்துவமனைக்கு சென்றதில்லை. மருந்துகள் எதையும் உட்கொண்டதில்லை. 

இட்லி, சாதம் என எளிதில் செரிமானமாகும் உணவு, பழங்களை சாப்பிடுகிறார். நன்றாக பேசுகிறார். வீட்டுக்குள் மட்டுமே அவரது நடமாட்டம் உள்ளது. பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் நிறைவாக கொண்டாடினோம். விழாவில் மகன், மகள், பேரன், கொள்ளுப் பேரன் என 100 பேர் வரை பங்கேற்றனர். அனைவரும் அம்மாவிடம் ஆசி பெற்றோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close