[X] Close

பிளஸ் 2 தேர்வெழுதிய 62 கைதிகள் தேர்ச்சி: மதுரையில் 3 பேர் தேர்ச்சி


prisoners-2-exam-result

  • kamadenu
  • Posted: 17 May, 2018 11:33 am
  • அ+ அ-

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 73 சிறைக் கைதிகளில் 62 பேர் தேர்ச்சி பெற்றனர். மதுரையில் 3 பேர் தேர்வாகினர்.

தமிழக அளவில் ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வின்போது, விருப்பமுள்ள சிறைக் கைதிகளும் தனித் தேர்வர்களாக தேர்வெழுத அனுமதிக்கப்படுவர். இந்த ஆண்டு 73 கைதிகள் பிளஸ் 2 தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். அதன்படி, வேலூர் பெண்கள் சிறையில் இருந்து தேர்வு எழுதிய 6 பேரில் 4 பேரும், சென்னை புழல் சிறை சிபி-1-ல் இருந்து எழுதிய 9 பேரும், கோவை சிறையிலிருந்து எழுதிய 14 பேரில் 11 பேரும், திருச்சியிலிருந்து எழுதிய 17ல் 15 பேரும் தேர்ச்சி பெற்றனர். 

மதுரை மத்திய சிறையில் இருந்து தேர்வெழுதிய மணிகண்டன், பாண்டியன், மூர்த்தி ஆகியோர் தேர்ச்சி பெற்றனர் ஒருவர் மட்டும் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை. நெல்லை பாளையங்கோட்டையில் 8-ல் 6 பேரும், சேலத்தில் 3 பேரும், வேலூரில் 7-ல் 6 பேரும், கடலூரில் 2 பேரும், சிபி-2 சென்னை புழல் சிறையில் இருந்து 2 பேரும் என, மொத்தம் 62 கைதிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 11 கைதிகள் தேர்ச்சி பெறவில்லை என, சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்தது. பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சிபெற்ற கைதிகளை சிறைத்துறை அதிகாரிகள் பாராட்டினர்.

- என். சன்னாசி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close