[X] Close

மிஸ் பண்ணிடாதீங்க.. பழைய வண்ணாரப்பேட்டை கிருஷ்ணவேணி புகழ் கொழுக்கட்டை


kozhukattais-from-chennais-old-washermanpet-anyone

  • kamadenu
  • Posted: 16 May, 2018 16:21 pm
  • அ+ அ-

பழைய வண்ணாரப்பேட்டைக்கு சென்றீர்கள் என்றால் பார்த்தசாரதி தெருவில் உள்ள கிருஷ்ணவேணி பாட்டியைத் தேடிச் சென்று அவர் விற்கும் கொழுக்கட்டையைச் சுவைத்து விடுங்கள். அவரது பேச்சைப் போன்று அவ்வளவு இனியவை அந்த கொலுக்கட்டைகள்.

பாட்டிக்கு 70 வயது ஆகிறது. ஆனாலும், தினமும் காலை 5.30 மணிக்கு எழுந்துவிடுகிறார். கொழுக்கட்டைக்கு தேவையான மாவைத் தயார் செய்கிறார். வெள்ளைக் கொழுக்கட்டை, பழுப்பு நிற கொலுக்கட்டை என தேங்காய் மனம் பரவ இருவகை கொழுக்கட்டைகள் மற்றும் சுண்டல் வகைகளைப் பக்குவமாக சமைத்து எடுத்துக் கொள்கிறார்.

நேராகப் பழைய வண்ணாரப்பேட்டை பார்த்தசாரதி தெருவுக்குச் செல்கிறார். அந்தத் தெருவில்தான் அவர் கடை விரிக்கிறார். நிழல் எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் தனது இருப்பிடத்தை அவ்வப்போது மாற்றிக் கொள்கிறார்.

அவரிடம் பேசியபோது.. "30 ஆண்டுகளாக கொழுக்கட்டை விற்கிறேன். முன்னர் பழைய வண்ணாரப்பேட்டை பாலத்தில் 15 ஆண்டுகளாக விற்றேன். இப்போது 15 ஆண்டுகளாக இந்த பார்த்தசாரதி தெருவில் கொழுக்கட்டை விற்கிறேன். 
என் கணவர் பழ வண்டி வைத்திருந்தார். இப்போது அவருக்கு வேலை இல்லை. எனது வருமானத்தில்தான் 3 குழந்தைகளையும் படிக்க வைத்தேன்.

இரண்டு வகை கொழுக்கட்டைகள் உண்டு. பிரவுன் நிற கொழுக்கட்டை செய்வதற்கு முன் அரிசியை வறுத்து அரைக்கிறேன். அதில் வெள்ளப்பாகு சேர்ந்து தேங்காய் துருவலை மேலே இடுகிறேன். இரண்டு கொழுக்கட்டைகள் ரூ.5. இதுதான் எனது கொலுக்கட்டைகளில் விலைப்பட்டியல்" என்றார் சிரித்து முகத்துடன்.

பூர்ண உருண்டை, பொரிமா உருண்டை என இரண்டு கொழுக்கட்டைகளுமே அந்தப் பகுதியில் மிகவும் பிரபலம்.
கிருஷ்ணவேணியின் சிறப்பு ஒருநாள் கூட அவர் தலையில் பூச்சூடாமல் வருவதில்லையாம். நன்கு முடிந்த கொண்டையில் மல்லிகையை வைத்து மேலே ஒரு ரோஜாவை வைத்து அலங்கரித்திருக்கிறார்.

கிருஷ்ணவேணிக்கு சொந்த் ஊர் தருமபுரி. திருமணம் முடிந்தவுடன் அவர் சென்னைக்கு வந்துள்ளார். இன்றளவும் பழைய வண்ணாரப்பேட்டைதான் அவரது ஏரியா. மாலையில், வீடு செல்லும்போது விற்காமல் மீதமிருக்கும் கொலுக்கட்டைகளை ஆதரவற்றோர், பசியில் உள்ளவர்களுக்குக் கொடுத்துவிடுகிறார். "என்னுடைய கொழுக்கட்டைகளால் யாரேனும் ஒருவரது பசி அடங்கினாலும் எனக்கு மகிழ்ச்சிதான் என்கிறார்" கிருஷ்ணவேணி.

கிருஷ்ணவேணி கடை கொழுக்கட்டைகளைத் தேடி வந்து வாங்கிச் செல்லும் வாடிக்கையாளர்கள் இருந்தாலும் கிருஷ்ணவேணிக்கு ஒருநாளும் தனது கூடையில் இருந்து ஒரு கொழுக்கட்டையை எடுத்துச் சாப்பிடத் தோன்றியதில்லையாம். ஒருவேளை வேறு யாராவது சமைத்துதந்தால் ஆவல் வந்திருக்கும் என்றூ கூறும் கிருஷ்ணவேணி தான் கொண்டுவந்திருந்த காரக் குழம்பு பீட்ரூட் பொறியல் மதிய உணவை எடுத்து உண்ணத் தொடங்கினார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close