[X] Close

சிறுநீரக கல் அடைப்பு நோய் ஏற்படாமல் தடுப்பது எப்படி?


kidney-stone-prevention

  • kamadenu
  • Posted: 15 May, 2018 12:43 pm
  • அ+ அ-

கோடை காலத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் சிறுநீரக கல் அடைப்பு நோயை குணப்படுத்த வேண்டிய வழிமுறைகள் குறித்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் இரா.மோகன் விளக்கியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 

நாம் குடிக்கும் தண்ணீரிலும், சாப்பிடும் உணவிலும், கால்சியம், பாஸ்பேட், ஆக்சலேட், யூரியா என்ற பல தாது உப்புக்கள் உள்ளன. இவை உணவு செரிமானத்துக்குப் பின் சிறுநீரில் வெளியேறிவிடும். சில சமயங்களில் ரத்தத்தில் அதிகரிக்கும்போது, சிறுநீரில் வெளியேறுவதற்கு சிரமப்பட்டு வெளியேறாமல் சிறுநீரகம், சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப்பை ஆகிய இடங்களில் இந்த உப்புக்கள் படிகம் போல படிந்து கல் போல திரளும். இது சிறு கடுகு அளவு போல ஆரம்பித்து நெல்லிக்காய் அளவுக்கு வளர்ந்து விடும். இதுதான் சிறுநீரகக்கல் எனப் படும். 

நோய் வரக் காரணம்: போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது, உப்பு, மசாலா மிகுந்த உணவு வகைகளை அடிக்கடி சாப்பிடுவது, வெயிலில் அலைவது, சிறுநீர் கழிப்பதை கழிக்காமல் நேரம் கடத்துவது, சிறுநீர் பாதையில் நோய் தொற்றுவது, உணவிலும், குடிநீரிலும் கால்சியம் குளோரைடு மிகுதியாக இருப்பது போன்றவை கல் அடைப்பு ஏற்பட காரணங்களாகும். பரம்பரையாகவும் இந்நோய் வர வாய்ப்புள்ளது. 

சிறுநீரகப்பாதையில் உருவாகும் கல், சிறுநீர் ஓட்டத்தை தடை செய்யும். இதன் விளைவாக சிறுநீரகத்திலோ, சிறுநீர்ப்பையிலோ சிறுநீர் தேங்கும். இதனால் சிறுநீரகம் வீங்கும். இதனை ஆரம்பத்திலே கவனிக்காமல் விட்டால் சிறுநீரகம் பழுதாகி செயலிழந்து விடும். 

அறிகுறிகள்: சிறுநீரகத்தில் கல் இருந்தால் ஆரம்பத்தில் எந்த அறிகுறியும் தெரியாது. கல் நகரும் பொழுது சிறுநீரகக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தும் போது தான் வலி உண்டாகும். இந்த வலி முதுகின் விலா எலும்புகளுக்கு கீழ்பகுதியிலிருந்து உண்டாகி வயிற்றின் கீழ்ப்பகுதிக்கு பரவும். சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், வலி, ரத்தம் கலந்து வருதல், குமட்டல், வாந்தி போன்றவை அறிகுறிகளாகும். 

சிறுநீரக கல் உருவாக காரணமான உணவுகள்: பசலைக்கீரை, முட்டைக்கோஸ், அவரை, தக்காளி, கோதுமை, முந்திரிப் பருப்பு, மீன், இறைச்சி, பயறு வகைகள், கேரட், பால், தயிர், முட்டை, ஐஸ்கிரீம், சாக்லேட், பாதாம்பருப்பு, சோயா பீன்ஸ். 

சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்கள்: வாழைத்தண்டு, சுரைக்காய், வெண்பூசணி, வெள்ளரிக்காய், முள்ளங்கி ஆகிய காய்களை சேர்த்துக்கொள்ளலாம். முக்கியமாக அதிகளவில் தண்ணீர் அருந்த வேண்டும்.

சிகிச்சை: நீர்முள்ளி குடிநீர் அல்லது சிறுபீழை குடிநீர் அல்லது நெருஞ்சில் குடிநீர் இவற்றில் ஏதாவது ஒன்றை 10 கிராம் எடுத்து 400 மி.லி தண்ணீரில் நன்கு காய்ச்சி 100 மி.லி ஆக சுண்ட வைத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும். இந்த குடிநீருக்கான பொடிகள் மாவட்ட சித்த மருத்துவமனையில் இலவசமாக கிடைக்கிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் தெரிவித்துள்ளார். 

வாக்களிக்கலாம் வாங்க

வடசென்னை படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close