[X] Close
 

அரசு பஸ்கள் இருக்கை அளவு திடீர் குறைப்பு? - போக்குவரத்துக் கழகம் மீது பயணிகள் குற்றச்சாட்டு


government-bus-seats-reduced

போதுமான இடவசதி இல்லாததால் பேருந்துக்குள் சிரமப்பட்டு அமர்ந்துள்ள பயணிகள் | படங்கள்: ஜி.மூர்த்தி

  • kamadenu
  • Posted: 15 May, 2018 12:10 pm
  • அ+ அ-

மாநகரம் மற்றும் புறநகரில் இயக்கப்படும் புதிய மற்றும் மராமத்து செய்த அரசு பஸ்களில் இருக்கைகளின் அளவை குறைத்துள்ளதால் தங்களால் வசதியாக உட்கார முடியவில்லை என ‘தி இந்து’ உங்கள் குரல் சேவையில் பயணிகள் சிலர் புகார் தெரிவித்துள்ளனர். 

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து மதுரையில்தான் அதிக அளவு மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. 754 தாழ்தள பஸ்கள் மற்றும் சாதாரண டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. 50 கி.மீ. தூரம் வரை டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. மாநகரப் பகுதியில் 24 மணி நேரமும் போக்குவரத்து வசதியை அரசு போக்குவரத்துக் கழகம் வழங்குகிறது.

மதுரை கோட்ட போக்குவரத்துக் கழகத்துக்கு இப்படி பல்வேறு பெருமைகள் இருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக சரியான பராமரிப்பின்றி இயக்கப்படும் ஓட்டை உடைசலான பஸ்களால் பயணிகள் அதிக சிரமம் அடைந்து வருகின்றனர். பல பஸ்களில் இருக்கை அருகே உள்ள ஜன்னல் கம்பிகள், கைப்பிடிக் கம்பிகள் சேதமடைந்துள்ளன. சில பஸ்களில் படிக்கட்டுகள் உடைந்து, தொங்கிய நிலையில் உள்ளன. மழை காலங்களில் பஸ்களின் மேற்கூரையில் தண்ணீர் ஒழுகுவதால் பலரும் குடைபிடித்தபடியே பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.

இதுபோன்று பல்வேறு இன்னல்களை தாங்கிக் கொண்டு பயணிகள் பயணம் செய்து வரும் நிலையில் தற்போது மாநகர, புறநகர பஸ்களில் இருக்கையின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். 

இதுகுறித்து ‘தி இந்து’ உங்கள் குரல் சேவையை தொடர்புகொண்ட நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த கிறிஸ்டோபர் என்ற பயணி கூறியதாவது:

தற்போது புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள அரசு பஸ்களில் இருக்கையின் அளவு மற்றும் இடைவெளி குறைக்கப்பட்டுள்ளது. 


தயாரிப்பு நிறுவன பெயரோ, லோகோவோ இல்லாமல் உள்ள மாநகர தாழ்தள பேருந்து

அதனால், இருக்கையில் அமருவதற்கு நெருக்கடியாக உள்ளது. பஸ் நிறுத்தம் வரும்போது உடனடியாக எழுந்து வெளியே வர முடியவில்லை. பஸ்களுடைய வருமானத்தை அதிகரிப்பதற்காக இருக்கையின் அளவை சுருக்கி அதன் எண்ணிக்கையை அதிகரித்துள்ளனரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. உடனடியாக அனைத்து பஸ்களையும் ஆய்வு செய்து பயணிகள் சிரமமில்லாமல் அமருவதற்கு வசதியாக இருக்கை அளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், முன்பெல்லாம் பஸ்களில் அந்த பஸ்களின் தயாரிப்பு நிறுவனங்களின் பெயர் மற்றும் லோகோ குறிப்பிடப்பட்டிருக்கும். குறிப்பாக அரசு பஸ்களில் அசோக் லேலேண்ட், டாடா போன்ற தனியார் நிறுவனங்கள் பெயர்கள் இடம்பெற்று இருக்கும். 

தற்போது அந்த பெயர்களோ, லோகோவோ இடம்பெறாமல் அரசு பஸ்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு தயாரிப்பு நிறுவனங்கள் பெயரில்லாமல் எப்படி ஆர்.டிஓ. அலுவலகத்தில் பதிவு செய்து பஸ்களை இயக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இருக்கை அளவை குறைக்கவில்லை

இதுகுறித்து மாநகர போக்குவரத்துக் கழக உயர் அதிகாரி மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரி ஆகியோரிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது: 

பஸ்களின் இருக்கை அளவு குறைக்கப்பட்டதாகக் கூறுவது தவறான தகவல். இருக்கைக்கான அளவு, அதற்கு இடையிலான இடைவெளி, பஸ் உயரம் மற்றும் பயணிகள் நடந்து செல்வதற்கு இடைவெளி விட்டு பஸ்ஸின் பாடி கட்டப்பட வேண்டும். அப்படியிருந்தால் மட்டுமே ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பதிவு செய்ய முடியும்.

முன்பு பஸ்சின் முழு கட்டுமானமும் தனியார் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டன, ஆனால் தற்போது சேஸ் மட்டுமே அசோக் லேலேண்ட் உள்ளிட்ட பிற நிறுவனங்கள் தயாரித்து கொடுக்கின்றன. பஸ் பாடி கட்டுவது முழுவதும் அரசு போக்குவரத்துக் கழகத்தாலேயே செய்யப்படுகிறது. குரோம்பேட்டை உள்ளிட்ட மூன்று இடங்களில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பாடி கட்டும் இடம் உள்ளது. சேஸ் மட்டுமே பிற நிறுவனங்களில் இருந்து வாங்கப்படும்பட்சத்தில், அந்த நிறுவன பிராண்ட் பெயர் போட வேண்டிய அவசியம் இல்லை இவ்வாறு அவர்கள் கூறினர்.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close