[X] Close

மீனவர்கள் எல்லை தாண்டினால் எச்சரிக்கை செய்யும் கருவி: விஞ்ஞானி என். சிவசுப்பிரமணியன் தகவல்


fisherman-tamilnadu-border

எல்லை தாண்டினால் எச்சரிக்கை செய்யும் கருவி.

  • kamadenu
  • Posted: 14 May, 2018 11:18 am
  • அ+ அ-

மீனவர்கள் எல்லை தாண்டினால், எச்சரிக்கை செய்யும் கருவியை இஸ்ரோ கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானி என். சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரத்தில் மாணவர் அறிவியல் பேரவை சார்பில், நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி என்.சிவசுப்பிரமணியன் கலந்து கொண்டார். 

இஸ்ரோ கண்டுபிடிப்பு

கருத்தரங்குக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

மீனவர்களுக்கு கடலில் எந்த இடத்தில் மீன்வளம் அதிகமாக இருக்கிறது என்பதைக் கண்டறியும் தொழில்நுட்பமும், கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது மீனவர்கள் அவர்களுக்கே தெரியாமல் எல்லை தாண்டும்போது ஒலி எழுப்பி எச்சரிக்கை செய்யும் கருவிக்கான தொழில்நுட்பத்தையும் இஸ்ரோ கண்டுபிடித்துள்ளது. 

 -  என். சிவசுப்பிரமணியன்

ஒலி எழுப்பி எச்சரிக்கை

கடலில் எந்த இடத்தில் மீன்வளம் அதிகமாக இருக்கிறது என்பதை முன்கூட்டியே செயற்கைக்கோள் மூலம் தெரிந்து கொண்டு, அந்த இடத்துக்கு மீனவர்கள் சென்று கடலில் மீன்பிடிக்கலாம். எல்லையை தாண்டும்போது மீனவர்களுக்கு ஒலி எழுப்பி எச்சரிக்கை தரக்கூடிய கருவி தற்போது கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கு வழங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கும் இக்கருவியை தயாரித்து வழங்கலாம்.

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்

குடிநீர் பற்றாக்குறையை முழுமையாகப் போக்கும் வகையில், கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை இஸ்ரோ கண்டுபிடித்துள்ளது. குறைந்த முதலீட்டில் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த முடியும். முதலீட்டில் பாதி தொகையை அரசும், மீதி தொகையை தொண்டு நிறுவனங்களும் வழங்கினால் இத்திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்த முடியும். 
கடல் நீரில் இருந்து 5 லட்சம் மில்லியன் லிட்டர் குடிநீரை தினமும் உற்பத்தி செய்ய முடியும். ஒரு லிட்டர் குடிநீரை 10 பைசாவுக்கு விற்பனை செய்யலாம். இத்திட்டம் மூலம் குடிநீர் பற்றாக்குறையை முழுமையாக தீர்க்க முடியும்.

நியூட்ரினோ ஆய்வு மையம் 

நியூட்ரினோ ஆய்வு மையம், தேனியில் அமைக்கப்பட இருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். இந்த ஆய்வு மையம் முதலில் அமெரிக்காவிலும், பின்னர் ரஷ்யாவிலும், மூன்றாவதாக ஜப்பானிலும் அமைந்துள்ளது. இந்த ஆய்வு மையம் நான்காவதாக இந்தியாவில் தமிழகத்தில் அமைந்தால், சர்வதேச அளவில் அறிவியல் திறனை வளர்க்கும் மையமாக அமையும். இம்மையத்தால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்பதை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி மையம் அமைய துணை நிற்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். 

- எஸ். முஹம்மது ராஃபி

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close