[X] Close
 

என்ன செய்யப்போகிறார் ரஜினி? - நிர்வாகிகளுடன் ஆலோசனை


rajini-wants-poll-booth-committees

  • நெல்லை ஜனா
  • Posted: 13 May, 2018 19:05 pm
  • அ+ அ-

அரசியல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கான உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் 10-ம் தேதி, முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது கூட்டத்தில் பேசுகையில் ‘‘நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று நீங்கள் தொடர்ந்து வற்புறுத்தியதால்தான் அரசியல் கட்சி தொடங்க சம்மதித்தேன். இதை தமிழக மக்களுக்கும் தெரிவித்துவிட்டோம். எனவே, அரசியலில் இறங்கும் முடிவில் இருந்து நான் பின்வாங்கப் போவதில்லை.

அது உறுதி. இந்த காலகட்டத்தில்தான் நாடாளுமன்றத் தேர்தல் வரும். அதுபற்றி நாம் இப்போது கவனம் செலுத்தப் போவதில்லை. அடுத்த தமிழக சட்டப்பேரவை தேர்தல்தான் நம் இலக்கு. பாஜகவுடன் நாம் கூட்டணி சேரப் போகிறோம் என்று யாரும் நினைக்க வேண்டாம். பாஜகவுடன் நிச்சயம் கூட்டணி கிடையாது’’ எனக் பேசினார்.

வலுவான அடித்தள கட்டமைப்பை உருவாக்கிய பிறகே கட்சியை தொடங்க வேண்டும் என்பதில் நடிகர் ரஜினிகாந்த் உறுதியாக இருப்பதாக தெரிகிறது. அதற்காக, தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றம் என பெயர் மாற்றம் செய்து அதற்கு மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமித்துள்ளார்.

இந்நிலையில், இளைஞர் அணி மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை நடத்தினார். இதற்காக அனைத்து மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர்களும் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்துக்கு வந்திருந்தனர்.

அப்போது தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்வது குறித்து அவர்களிடம் ஆலோசனை கேட்டதாக தெரிகிறது. மேலும், அவ்வாறு சுற்றுப் பயணம் மேற்கொண்டால் செய்ய வேண்டிய ஏற்பாடுகள், அதற்கான தயார் நிலை உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் அவர்களுடன் ரஜினி விவாதித்தாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close