[X] Close
 

‘ரப்பர் மரத்துக்கு ரணங்கள் புதிதல்ல’ - பாரதிராஜா மீது வழக்கு பதிவு செய்ததற்கு வைரமுத்து கண்டனம்


bharathiraja-vairamuthu

  • நெல்லை ஜனா
  • Posted: 13 May, 2018 13:10 pm
  • அ+ அ-

கடந்த ஜனவரி மாதம் 18-ம் தேதி சென்னை வடபழனியில் 'கடவுள்-2' படவிழாவில் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா கலந்து கொண்டார். அதில் ஆண்டாள் குறித்து கருத்து தெரிவித்த வைரமுத்துவிற்கு ஆதரவாக பேசிய அவர் ஆயுதம் எடுப்போம் என பேசியதாகவும், விநாயகரை இறக்குமதி செய்யப்பட்ட கடவுள் என பேசியதாகவும் இந்து மக்கள் முன்னணியினர் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் மீது உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் வடபழனி போலீஸார் இயக்குநர் பாரதிராஜா மீது 295(எ) ( மத நம்பிகைக்களுக்கு எதிராக மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதத்தில் பேசுவது), 506(1) (கொலை மிரட்டல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது

‘‘பாரதிராஜா மீது வழக்கு பழிவாங்கும் செயலாகும். வழக்கு பெரிதல்ல; ரப்பர் மரத்துக்கு ரணங்கள் புதிதல்ல. அவரை நாங்கள் சட்டப்படி மீட்டெடுப்போம்’’ எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close