[X] Close

நீட் வேண்டாம், மோடி வேண்டாம், எதுவுமே வேண்டாம் என்றால் என்ன செய்வீர்கள்?- பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி


  • kamadenu
  • Posted: 17 Apr, 2019 18:12 pm
  • அ+ அ-

சேலம் பெரிய நகரமாக உருவாக 8 வழிச் சாலை அத்தியாவசியத் தேவை என்று கோவை தொகுதி பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

 

இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அவர், முன்பெல்லாம் மத்திய அரசு எங்கோ இருப்பது போன்ற தோற்றம் இருந்தது. ஆனால் இப்போது மத்திய அரசு தங்களோடு இருப்பதாகவே மக்கள் உணர்கிறார்கள். இது மகத்தான வெற்றி.

 

நீட் தேர்வில் என்ன தவறு இருக்கிறது, அதில் எதைச் சரிசெய்யவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் இதுவரை எதையும் கூறவில்லை. நீட் வேண்டாம், மோடி வேண்டாம், எதுவுமே வேண்டாம் என்றால் என்ன செய்வீர்கள்?

 

மக்களுக்கு எந்த நல்லதுமே நடக்கக்கூடாது என்று நினைப்பவர்கள்தான் திமுக - காங்கிரஸ் கூட்டணி. மக்கள் நலனை அவர்கள் எப்போதும் புறக்கணித்தே வந்திருக்கிறார்கள். நீட் தேர்வால்தான் சாமானியன் கூட மருத்துவராக முடியும்.

 

பொதுவாக நீதிமன்றத் தீர்ப்புகளை மதிக்கிறோம். ஆனால் எல்லாத் தீர்ப்புகளும் மக்கள் நலனுக்காக மட்டுமே இருப்பதில்லை. சேலம் எட்டுவழிச் சாலை அத்தியாவசியமான ஒன்று. பெங்களூருக்கும் சென்னைக்கும் மத்தியில் சேலம் அமைந்துள்ளது. எட்டு வழிச் சாலை அமைந்தால் சேலம், பெரிய, மகத்தான நகரமாக உருவாகும். இதைத் தடுப்பது தமிழகத்தின் வளர்ச்சியைத் தடுப்பதாகும்.

 

தொழில் நகரமான கோவை ஒருமுறை வீழ்ந்ததற்குக் காரணம் இஸ்லாமிய பயங்கரவாதிகள். அடுத்த காரணம் கம்யூனிஸ்டுகளின் சித்தாந்தம்தான். ஜிஎஸ்டியால் ஏற்பட்ட பாதிப்புகளை விட பயன்களே அதிகம். இம்முறை தேர்தலில் கிடைக்கும் மிகப்பெரிய தோல்வி, கோவை மண்ணில் கம்யூனிஸ்ட் சித்தாந்தத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close