[X] Close

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் 19-ம் தேதி வெளியீடு


2-19

  • kamadenu
  • Posted: 17 Apr, 2019 07:35 am
  • அ+ அ-

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் (ஏப்.19) வெளியிடப்படுகிறது. விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு ஏப்ரல் 22-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

தமிழக சமச்சீர் பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ல் தொடங்கி 19-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த ஆண்டு மாநிலம் முழுவதும் 8.8 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணி முடிந்துவிட்டது. தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் தயாரிக்கும் பணிகள் இப்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.

இந்நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19-ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்ட அறிவிப்பு:பிளஸ் 2 தேர்வு முடிவுகளை ஏப்ரல் 19-ம் தேதி www.tnresults.

nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in இணையதங்களில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். இதுதவிர பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமும், பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கு குறுந்தகவல் மூலமும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். பிளஸ் 2 தேர்வர்கள் ஏப்ரல் 20 முதல் 26-ம் தேதி வரை தாங்கள் படித்த பள்ளி அல்லது தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியர் வழியாக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம். தொடர்ந்து ஏப்ரல் 24-ம் தேதி முதல் www.dge.tn.nic.in இணையதளத்தில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற விரும்பினால், பள்ளி மாணவர்கள் படித்த பள்ளிகள் மூலமும், தனித் தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்கள் வழியாகவும் ஏப்ரல் 22 முதல் 24-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் பெற அனைத்து பாடங்களுக்கு ரூ.275 கட்டணம் செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்போர் மொழி பாடங்களுக்கு ரூ.305, மற்ற பாடங்களுக்கு ரூ.205 கட்டணம் செலுத்த வேண்டும்.

பிளஸ் 2 வகுப்புக்கான சிறப்பு துணைத்தேர்வு ஜூன் 6 முதல் 13-ம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்புக்கான சிறப்பு துணைத் தேர்வு ஜூன் 14 முதல் 21-ம் தேதி வரையும் நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close