[X] Close

கோடநாடு விவகாரம்; ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி பேசக்கூடாது: உயர் நீதிமன்றம் தடை


  • kamadenu
  • Posted: 16 Apr, 2019 16:21 pm
  • அ+ அ-

கோடநாடு விவகாரத்தில் முதல்வர் பழனிசாமியைத் தொடர்புபடுத்திப் பேசும் ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கை முடித்து வைத்த உயர் நீதிமன்றம் இனி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி இருவரும் இதுகுறித்து பேசக்கூடாது என உத்தரவிட்டது.

கோடநாடு கொலை, கொள்ளைச் சம்பவத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை  தொடர்புபடுத்திப் பேசியதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது சென்னை  மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் அனுப்பப்பட்ட சம்மனை எதிர்த்தும், வழக்கை ரத்து செய்யக்கோரியும் ஸ்டாலின் தொடர்ந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், அவதூறு வழக்கு விசாரணைக்குத் தடை விதித்து உத்தரவிட்டார்.

அதன் பின்னரும் கோடநாடு சம்பவம் குறித்து ஸ்டாலின் தொடர்ந்து பேசி வருவதால், அவதூறு வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கூடுதல் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது இதுபோல் தொடர்ந்து பேச வேண்டாம் என ஸ்டாலினுக்கு அறிவுறுத்தும்படி நீதிபதி வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததுடன், தொடர்ந்து பேசினால் அவதூறு வழக்குக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ஸ்டாலின், கோடநாடு சம்பவம் குறித்து ராமநாதபுரம், தென்சென்னை, சோழிங்கநல்லூர், நீலகிரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல் ஆகிய இடங்களில் தொடர்ந்து பேசி வருவதாக கூறி, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.

ஸ்டாலின் தொடர்ந்து பேச தடை விதிக்க வேண்டுமெனவும், நீதிமன்ற வாய்மொழி உத்தரவைத் தொடர்ந்து மீறுவதால் அவமதிப்புச் சட்டத்தில் தண்டிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரும் மனுவுடன் சேர்த்து, நாளை விசாரிப்பதாக நீதிபதி இளந்திரையன் தள்ளிவைத்தார்.

நீதிமன்றம் அறிவுறுத்திய பின்னரும் கோடநாடு விவகாரத்தில் முதல்வரை தொடர்புபடுத்தி  திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து பேசி வருவதால், அவதூறு வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் இன்று கூடுதல் மனுத்தாக்கல் செய்யப்பட்டது

ஸ்டாலின், கோடநாடு சம்பவம் குறித்து ராமநாதபுரம், தென்சென்னை, சோழிங்கநல்லூர், நீலகிரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல் ஆகிய இடங்களில் தொடர்ந்து பேசியுள்ளார்

ஸ்டாலின் தொடர்ந்து பேச தடை விதிக்க வேண்டும் எனவும், நீதிமன்ற வாய்மொழி உத்தரவைத் தொடர்ந்து மீறுவதால் அவமதிப்புச் சட்டத்தில் அவரைத் தண்டிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்திருந்தனர்.

வழக்கில் கேள்வி எழுப்பிய நீதிபதி இளந்திரையன், தாம் கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்தபோது இரண்டு தரப்பும் பேசக்கூடாது, உதகை நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் பேசக்கூடாது என தெரிவித்திருந்தேன். ஆனால் மீண்டும் மீண்டும் அது பேசப்படுகிறது, ஏன் என கேள்வி எழுப்பினார்.

அப்போது பதிலளித்த ஸ்டாலின் தரப்பு வழக்கறிஞர் தங்கள் தரப்பில் இதுபோன்று இனி பேசமாட்டோம் என உறுதியளித்தார். தேர்தல் முடிந்த பின் இதுபோன்று பேசமாட்டோம் என உறுதியளித்தார்.

அப்போது குறிக்கிட்ட நீதிபதி இளந்திரையன், வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இதுகுறித்து பேசக்கூடாது என தெரிவிதித்திருந்தேன். ஏனென்றால் இது வழக்கு விசாரணையைப் பாதிக்கும், ஆகவே உதகை நீதிமன்ற வழக்கு முடியும்வரை இதுகுறித்து ஸ்டாலின் தரப்போ, முதல்வர் பழனிசாமி தரப்போ வெளியில் பேசக்கூடாது என உத்தரவிட்டார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் முடித்து வைத்து அவர் உத்தரவிட்டார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close