[X] Close

நூறு சதவீதம் திமுக ஆட்சி அமைக்கும்: வைகோ உறுதி


  • kamadenu
  • Posted: 16 Apr, 2019 12:35 pm
  • அ+ அ-

பொதிகைத் தென்றலைப் போல திமுக மக்களை அரவணைக்கும் எனவும் 100% திமுக ஆட்சி அமைக்கும் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் நாளையோடு (ஏப்ரல் 17) முடிவடைகிறது இதனால் அரசியல் கட்சித் தலைவர்கள் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திமுக கூட்டணியை ஆதரித்துச் சங்கரன்கோவிலில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய அவர், ''பகலெல்லாம் நெருப்பு வெயிலாக இருந்து, அந்த வெயில் தணிந்து, தென் பொதிகைத் தென்றல் காற்று எப்படி நம்மை அரவணைக்கிறதோ அதைப் போல திமுக தலைவர் உங்கள் கவலைகளை உணர்ந்திருக்கிறார்.

பிள்ளைகளைப் படிக்கவைக்க நீங்கள் வேறு வழியில்லாமல், நீங்கள் உயிராக நேசிக்கும் அரை சவரன்,ஒரு சவரன் என 5 சவரன் நகைகளை அடமானமாக வைத்துக் கடன் வாங்கியிருப்பீர்கள். அந்தக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இது நடக்கும். நூறு சதவீதம் திமுக ஆட்சி அமைக்கும்'' என்று பேசினார் வைகோ.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close