[X] Close

சிவகங்கை தொகுதிக்கு தனி தேர்தல் அறிக்கை


  • kamadenu
  • Posted: 16 Apr, 2019 12:17 pm
  • அ+ அ-

பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா, சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கான தனி தேர்தல் அறிக் கையை வெளியிட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:சிவகங்கை தொகுதிக்கான தேர்தல் அறிக்கையில் காரைக்குடி அருகே செட்டிநாட்டில் விமான நிலையம் அமைக்கப்படும். சிவகங் கையில் பல் மருத்துவக் கல்லூரி, ரூ.150 கோடியில் பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும். நீர் மேலாண்மையை மேம்படுத்த திட்டங்கள், காரைக்குடி - திருப் பத்தூர்- மதுரை புதிய ரயில் பாதை திட்டம் உள்ளிட்ட 58 திட்டங்கள் செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளோம்.

அம்பேத்கரை எதிர்த்தவர்கள் காங்கிரஸார். அம்பேத்கர் பெயரைக்கூறி, காங்கிரஸ் கட்சியினர் நீலிக்கண்ணீர் வடிக்கத் தேவையில்லை. கார்த்தி சிதம்பரம் தன்னை கைது செய்ய வேண்டாம் என்று அடிக்கடி நீதிமன்றம் சென்று வந்ததால் குழப்பத்தில் உள்ளார்.

பொன்.ராதாகிருஷ்ணனை அரை அமைச்சர் என்று ப.சிதம்பரம் பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ப.சிதம்பரம் அவரது மகனை போலவே குழப்பமாக பேசி வருகிறார். தமிழகத்தில் 40 தொகுதிக ளிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும். மத்திய அரசில் திமுக - காங்கிரஸ் கூட்டணி இருந்தபோது கிடைத்ததைவிட கூடுதலாக தமிழகத்துக்கு அமைச்சர்கள் கிடைப்பார்கள்.

வருமான வரிச் சோதனை குறித்து அடிப்படை தெரிந்த ப.சிதம்பரம் மக்களை திசை திருப்ப பொய் குற்றச்சாட்டு கூறி வருகிறார். பொய் குற்றச்சாட்டு கூறுவது அவருக்கு கைவந்தகலை. அதிமுக - பாஜக கூட்டணி வாக்கு வங்கியுள்ள மெகா கூட்டணி. இதனால் ஸ்டாலின் விரக்தியுடன் பேசி வருகிறார் என்றார். அமைச்சர் விஜய பாஸ்கர், செந்தில்நாதன் எம்.பி. உடன் இருந்தனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close