[X] Close

விருதுநகரில் சர்ச்சை சம்பவம்: சிறுவர்களை பிரச்சாரத்தில் ஈடுபடுத்திய அமமுக சமூகச் செயற்பாட்டாளர்கள் எதிர்ப்பு


  • kamadenu
  • Posted: 16 Apr, 2019 11:30 am
  • அ+ அ-

விருதுநகரில் சிறுவர்களை வீடு வீடாக அனுப்பி அமமுகவினர் பிரச்சாரம் செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமமுகவின் இச்செயலுக்கு சமூக செயற்பாட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

விருதுநகர் மக்களவைத் தொகு தியில் அமமுக சார்பில் பரமசிவ அய்யப்பன் போட்டியிடு கிறார். கிராமப்புறங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் பரமசிவ அய்யப்பனுக்கு ஆதரவாக அக்கட்சியினர் விருதுநகர் நகர் பகுதியில் கடந்த 2 நாட்களாக வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், அமமுகவினர் பிரச்சாரத்தில் அக்கட்சியினரைவிட சிறுவர்களையே அதிகம் காண முடிகிறது.

நகர்ப் பகுதியில் ஒவ்வொரு வார்டாகச் சென்று பிரச்சாரம் மேற்கொள்ளும் அமமுகவினர் தங்கள் கட்சி மற்றும் சின்னத்தைக் கூறி கோஷம் போடுவதற்காக பள்ளி விடுமுறையில் உள்ள சிறுவர்களைத் தங்களுடன் அழைத்துச் செல்கின்றனர். ஓட்டுக் கேட்டபடி முதலில் செல்லும் சிறுவர்களின் குரல் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் வெளியே வந்தவுடன், அவர்களிடம் துண்டுப்பிரசுரங்களைக் கொடுத்து வாக்குச் சேகரிக்கின்றனர் அக் கட்சினர்.

கடைகளிலோ, வணிக நிறுவனங்களிலோ, தொழிற் சாலைகளிலோ குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது சட்டப்படி குற்ற மாகும். அதற்கு தண்டனையும் உண்டு. ஆனால், அரசியல் கட்சிகளோ குறைந்த ஊதியம் கொடுத்தால் போதும் என்ற எண்ணத்தில் தங்களது பிரச் சாரத்துக்கு சிறுவர்களை ஈடு படுத்துகின்றனர். இதுவும் குழந்தைத் தொழிலாளர்களை பயன்படுத்துவது போன்றதே.

இதுகுறித்து, தேர்தல் நடத்தும் அலுவலர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டும், அவர்கள் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. சம்பந் தப்பட்டோர் மீது உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என சமூகச் செயற்பாட்டாளர்கள் வலி யுறுத்தி வருகின்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close