[X] Close

என் தந்தையின் மரணத்தை அரசியலாக்க வேண்டாம்: கொல்லப்பட்ட முதியவரின் மகன் வேண்டுகோள்


  • kamadenu
  • Posted: 16 Apr, 2019 10:58 am
  • அ+ அ-

ஒரத்தநாட்டில் மோடிக்கு வாக்கு கேட்டபோது, இளைஞர் தாக்கியதில் இறந்து போன கோவிந்தராஜின் மகன், ‘‘எனது தந்தையின் மரணத்தை யாரும் அரசியலாக்க வேண்டாம்’’ என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ்(75). ஒரத்தநாடு அரசு கால்நடைப் பண்ணையில் அலுவலக ஊழியராக பணியாற்றி ஓய்வுபெற்ற இவர். கடந்த 13-ம் தேதி இரவு ஒரத்தநாடு அண்ணா சிலை அருகே, "மோடிக்கு வாக்களியுங்கள்" என அவ்வழியே சென்றவர்களிடம் கூறினார்.

அப்போது அங்கு வந்த கண்ணந்தங்குடியைச் சேர்ந்த கோபிநாத் என்பவர் இவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் கையால் அடித்தார். அப்போது கீழே விழுந்த கோவிந்தராஜ் அன்று இரவே இறந்துவிட்டார். போலீஸார், கோபிநாத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் கோவிந்தராஜின் உடல் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில், கோவிந்தராஜின் வீட்டுக்கு அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம் உள்ளிட்ட அதிமுகவினர், தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் உள்ளிட்ட திமுகவினர் நேற்று வந்து ஆறுதல் கூறிச் சென்றனர்.

எதிர்க்கட்சியினர்தான் கோவிந்தராஜை அடித்து கொலை செய்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வரும் நிலையில், அவரது மகன் புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

என் தந்தை, காமராஜர் காலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி மீது பற்றுக் கொண்டவர். அதன்பிறகு திராவிட இயக்கத் தலைவர்களையும் புகழ்ந்து பேசி வருபவர். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, அண்ணா, பெரியார், கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை புகழ்ந்து கவிதை எழுதி அவர்களுக்கு என் தந்தை அனுப்பியுள்ளார். ஆனால், எந்தக் கட்சியிலும் அவர் அடிப்படை உறுப்பினராகவில்லை.

பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு நீண்டகாலமாக வராத ஓய்வூ தியம், சில ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டதால், என் தந்தைக்கு பிரதமர் மோடியைப் பிடிக்கும். ஆனால், பாஜகவின் கொள்கைகளையோ, சித்தாந்தங்களையோ அவர் பேசியதும் இல்லை, பிறரிடம் பரப்பியதும் இல்லை. எனவே, என் தந்தையின் மரணத்தை யாரும் அரசியலாக்க வேண்டாம் என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close