[X] Close

எங்களைப் போல் உழைப்பால் வளர்ந்தவரா ஸ்டாலின்?- பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேச்சு


  • kamadenu
  • Posted: 16 Apr, 2019 10:55 am
  • அ+ அ-

திமுக தலைவர் ஸ்டாலின் என்ன, எங்களைப் போல் உழைப்பால் வளர்ந்தவரா என்று கிருஷ்ணகிரி பிரச்சார பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி பேசினார்.

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமிக்கு ஆதரவு திரட்டும் வகையில் கிருஷ்ணகிரி காரநேசன் திடலில் நேற்று முன்தினம் இரவு பிரச்சார பொதுக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழக முதல்வர் பழனிசாமி பேசியது:

தமிழக அரசு மக்களுக்கு என்ன செய்தது என ஒவ்வொரு மேடையிலும் திமுக தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார். உயர் கல்வியில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. பல அரசு கல்லூரிகள் தொடங்கப் பட்டுள்ளன. வேளாண் துறை வளர்ச்சி பெற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. மின் மிகை மாநிலமாக தமிழகம் உள்ளது. சட்டம்-ஒழுங்கு நிலை, ஸ்டாலின் குறிப்பிடுவது போன்று அல்லாமல் இந்தியாவிலேயே சட்டம்-ஒழுங்கை சிறப்பாக பராமரிப்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. திமுக ஆட்சி காலத்தில் மதுரை பக்கம் எட்டிக் கூட பார்க்காத ஸ்டாலின் தற்போது மதுரையில் காலையில் நடைபயிற்சி செல்கிறார், வீதிகளில் உலா வருகிறார்.

எம்ஜிஆர் காலம் தொடங்கி படிப்படியாக உயர்ந்து முதல்வராகி இருக்கிறேன். தந்தையிடம் இருந்த திமுக தலைவர் பதவி தற்போது ஸ்டாலினிடம். எங்களைப் போல் அவர் உழைத்து வளர்ந்தவரா? எண்ணம் நல்லதாக இருந்தால் பதவி தேடி வரும்.

என் தலைமையிலான அதிமுக ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த தமிழகம் முழுக்க 35 ஆயிரம் போராட்டங்களை தூண்டி விட்டார் ஸ்டாலின். 2 ஜி வழக்கு விவகாரத்தில் தொடர்புடைய ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக்பாஷாவின் மர்ம மரணம் குறித்து விசாரிக்க வலியுறுத்தி அவரது மனைவி குடியரசுத் தலைவரிடம் மனு அளித்துள்ளார். தேர்தலுக்கு பிறகு இந்த விவகாரம் குறித்து சட்ட ரீதியாக விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

கருணாநிதி மறைவின்போது சென்னை சர்தார் வல்லபாய் படேல் சாலையில் ரூ.300 கோடி மதிப்பிலான நிலத்தை தர அரசு முன் வந்தபோது அதை ஏற்காமல் நீதிமன்றம் சென்றவர் ஸ்டாலின். ஆனால், இந்த விவகாரம் குறித்து தற்போது தவறான தகவல்களை பரப்பி அனுதாபத்தை பெற முயற்சிக்கிறார்.

இவ்வாறு பேசினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close