[X] Close

பன்முகத்தன்மையை இந்தியா இழக்கக்கூடாது- நாமக்கல்லில் கமல்ஹாசன் பேச்சு


  • kamadenu
  • Posted: 16 Apr, 2019 10:56 am
  • அ+ அ-

நாமக்கல் மக்களவைத் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் ஆர்.தங்கவேலை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

திரைப்படத்தில் நடனம் ஆடிப்பார்த்தேன். டயலாக் எல்லாம் பேசிப் பார்த்தேன், மக்கள் கைத்தட்டிவிட்டு சென்றுவிட்டனர். இப்போது என்னை குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக் கொண்டபின்னர், வணங்குகிறார்கள், வரவேற்கிறார்கள். என்னை நம்பி எதிர்காலத்தை ஒப்படைத் துள்ளனர். இதை ஏன் நான் முன்பே செய்யவில்லை என்ற வருத்தம் தான் மிகுந்துள்ளது. அரசியல் பேசி, அதற்கு பதில் பேசுவதற்கெல்லாம் நேரமில்லை. நமக்கு ஒரு வேலை உள்ளது.

ஒரு புரட்சியை தொடங்க வேண்டிய வேலை உள்ளது. அது தமிழகத்தை, இந்தியாவின் தலைவாசலாய் மாற்ற வேண்டிய புரட்சியாக வேண்டும்.

உலகதரத்தில் லாரி பாடி பில்டிங் செய்வதற்கான மையமாக நாமக்கல் மாறும். இரு கழகங்களும் எதுவும் செய்யவில்லை. நான் பாஜக பெயரை குறிப்பிடவில்லை என, அவர்கள் சொல்கிறார்கள். அவர்களின் பெயரையே நான் சொல்லவில்லை.

பாஜகவுக்கும் எனக்கும் தொடர்பு படுத்தி குளிர்காயும் அந்த கூட்டத்திற்கு சொல்கிறேன். இவர்கள் எல்லாம் காரியச்சுடர்கள். இவர்களுக்கு வேண்டு மெனும்போது காது கேட்கணும். இல்லையென்றால் காது கேட்கக்கூடாது. 20 ஆண்டுக்கு முன்னர் நான் எடுத்த ஹேராம் படத்தை பாருங்கள். இது நடக்கும் என்று முன்கூட்டியே சொன்னபடம் அது. நான் யார் என்று தமிழகத்திற்கே தெரியும்.

இந்தியாவின் பன்முகத் தன்மையை இந்தியா இழக்கக்கூடாது என்பதில் மிக மிக தெளிவாக நான் இருந்திருக்கிறேன். என்னுடைய படங்களில் பன்முகத் தன்மை, மதநல்லிணக்கம் திரும்பத் திரும்ப வலியுறுத்தும் படமாக இருந்திருக்கிறது, என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close