[X] Close

அமமுக வேட்பாளர் அப்பாதுரைக்கு ஆதரவாக டிடிவி தினகரன் போல் முகமூடி அணிந்து வாக்கு சேகரித்த தொண்டர்கள்


  • kamadenu
  • Posted: 16 Apr, 2019 10:28 am
  • அ+ அ-

அமமுக வேட்பாளருக்கு வாக்கு கேட்டு டிடிவி தினகரன் போல் முகமூடி அணிந்து அக்கட்சியின் தொண்டர்கள் வாக்கு சேரிக்கப்பில் ஈடுபட்டனர்.

கோவை மக்களவைத் தொகுதியில் அமமுக வேட்பாளர் என்.ஆர்.அப்பாதுரை பரிசுப் பெட்டகம் சின்னத்தில் போட்டியிடுகிறார். கோவை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

நேற்று காட்டூர் பகுதியில் நூற்றுக்கணக்கான அமமுக தொண்டர்கள், வாக்காளர்களைக் கவரும் வகையில் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் போன்ற முகமூடியை அணிந்து கொண்டு வேட்பாளர் என்.ஆர்.அப்பாதுரைக்கு வாக்கு சேகரித்தனர். அப்போது ஜெயலலிதா உருவம் பொறித்த கொடிகள் மற்றும் பரிசுப் பெட்டகத்தின் பதாகைகளைக் கைகளில் ஏந்தியவாறு வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.

கோவையில் பல்வேறு பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமமுக வேட்பாளர் என்ஆர் அப்பாதுரை பேசியதாவது:கோவை தொகுதியில் அமமுக வெற்றி பெறும். இதற்கு முன் வெற்றிபெற்றவர்கள் கோவைக்கு எதுவும் செய்யவில்லை.

தொழில் நகரமான கோவையில் ஜிஎஸ்டியால் பல்லாயிரக்கணக்கான தொழிற்கூடங்கள் மூடப்பட்டு விட்டன. நாங்கள் வெற்றி பெற்றதும், ஜிஎஸ்டி சதவீதத்தை குறைக்க நடவடிக்கை எடுப்போம். கோவை மாநகராட்சியில் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ள குடிநீர், சொத்துவரிகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு நிலவி வரும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். நான் வெற்றி பெற்றால் மக்கள் எதிர்பார்க்கும் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றித்தர பாடுபடுவேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close