[X] Close

கடந்த 5 ஆண்டுகளில் எண்ணற்ற சாதனைகள்; மோடி மீண்டும் பிரதமராக மக்கள் வாக்களிக்க வேண்டும்: 100-க்கும் மேற்பட்ட ஆளுமைகள் வேண்டுகோள்


5-100

  • kamadenu
  • Posted: 16 Apr, 2019 08:35 am
  • அ+ அ-

மோடி மீண்டும் பிரதமர் ஆவதற்கு தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டும்என்று தமிழகத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகள் 109 பேர் இணைந்து வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மூத்த பத்திரிகையாளர் மாலன், ஓய்வுபெற்ற டிஜிபி பாலசந்தர், பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி, சொற்பொழிவாளர் சரஸ்வதி ராமநாதன் உள்ளிட்டோர் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை நேற்று சந்தித்தனர்.

அவர்களோடு எழுத்தாளர் சிவசங்கரி, அரவிந்தன் நீலகண்டன், தமிழ்நாடு மருத்துவ சங்கத் தலைவர் சிஎம்கே ரெட்டி, தொல்லியல் துறை அறிஞர் ஆர்.நாகசாமி, விஞ்ஞானிகள் நி.கிருஷ்ணன், துரைராஜ், ராமநாதன், நாட்டுப்புற பாடகர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், கர்நாடக இசைக் கலைஞர்கள் டி.என்.சேஷகோபாலன், காயத்ரி வெங்கட்ராகவன், தமிழ்நாடு மீனவர் பேரவைத் தலைவர் அன்பழகனார், வாஸ்து சாஸ்திர நிபுணர் ஆண்டாள் பி.சொக்கலிங்கம் உட்பட பல்வேறு துறை நிபுணர்கள் 109 பேர் கையெழுத்திட்ட கூட்டறிக்கையை வெளியிட்டனர். அதில் கூறியுள்ளதாவது:

பிரதமர் நரேந்திர மோடியின் 5ஆண்டுகால ஆட்சியில் நாடு பல துறைகளில் முன்னேற்றம் அடைந்துள்ளது.

ஏழைகளுக்கு இலவச எரிவாயு இணைப்பு, அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம், 10 கோடி கழிவறைகள், மருத்துவக் காப்பீடு, மகப்பேறுகால விடுப்பை உயர்த்தியது, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தியது, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை, காஞ்சிபுரம், வேளாங்கண்ணியை புனித நகரமாக அறிவித்தது, ஹஜ் பயணிகளின் எண்ணிக்கையை உயர்த்தியது, தேசப் பாதுகாப்புக்கு முன்னுரிமை, பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தியது, உலகஅரங்கில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியது, உலகின் 6-வது பெரிய பொருளாதார சக்தியாக இந்தியாவை உயர்த்தியது எனஎண்ணற்ற சாதனைகளை மோடி அரசு செய்துள்ளது. எனவே, அடுத்த5 ஆண்டுகளுக்கு மோடி அரசு தொடர வேண்டும் என்று விரும்புகிறோம்.

நாட்டு நலனில் பெரிதும் அக்கறை கொண்ட, எவ்வித குற்றச்சாட்டுக்கும் ஆளாகாத, பாரதத்தை உலக அரங்கில் உயர்த்த தன்னலமற்ற சேவை செய்யும் பிரதமர் மோடி மீண்டும் இந்த நாட்டின் பிரதமர் ஆவதற்கு தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டுகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close