[X] Close

கொங்கு மண்ணில் வெற்றிக் கனி யாருக்கு?- கோவையில் பாஜக - மார்க்சிஸ்ட் கடும் போட்டி


  • kamadenu
  • Posted: 16 Apr, 2019 08:33 am
  • அ+ அ-

-ஆர்.கிருஷ்ணகுமார்

கொங்கு மண்ணின் மையப் பகுதி யான கோவை மக்களவைத் தொகுதி யில் வெற்றிக் கனியைப் பறிக்க பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ் ணனும், மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜனும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

கோவை மக்களவைத் தொகுதி யில் லட்சக்கணக்கான தொழிலாளர் கள் உள்ளனர். ஏற்கெனவே இந்த தொகுதி எம்.பி.க்களாக இருந்துள்ள சி.பி.ராதாகிருஷ்ணனும், பி.ஆர்.நடராஜனும்தான் தற்போதைய தேர்தலின் பிரதான வேட்பாளர்கள். வெற்றி வாகைசூட இவர்கள் இடை யேதான் கடும் போட்டி நிலவுகிறது.

களத்தில் 14 பேர்

மக்கள் நீதி மய்யம் சார்பில் அக்கட்சியின் துணைத் தலைவரான டாக்டர் ஆர்.மகேந்திரன் களத்தில் இருக்கிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் எஸ்.கல்யாண சுந்தரம், அமமுக சார் பில் என்.ஆர்.அப்பாத்துரை போட்டி யிடுகின்றனர். பகுஜன் சமாஜ் சார் பில் பி.கோவிந்தன், தமிழ்நாடு இளை ஞர் கட்சி சார்பில் பி.மணிகண்டன் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 14 பேர் களத்தில் உள்ளனர்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டியால் சிறு, குறு தொழில்க ளுக்கு ஏற்பட்ட பாதிப்பை மையப் படுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் பிரச் சாரம் செய்கிறார்.

‘‘மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் சிறு, குறு தொழில்கள் நசிந்து, ஏராளமான தொழிற்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளடனர். நான் வெற்றி பெற்றால், ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றம் கொண்டுவரு வேன். ஜாப் ஆர்டர் முறையில் செயல் படும் தொழில் நிறுவனங்களுக்கு, ஜிஎஸ்டியில் இருந்து முழு விலக்கு பெற்றுத் தருவேன்.

கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோக உரிமையைக்கூட பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தனியா ருக்கு தாரைவார்த்துவிட்டனர். அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வோம். மெட்ரோ ரயில் திட்டம், விமான நிலைய விரிவாக்கம், விசைத் தறித் தொழில் பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பத் துறை மேம்பாடு, ஆனைமலை, நல்லாறு திட்டம், அத்திக்கடவு திட்டத்தை சுற்றுச்சூழல் அனுமதியுடன் செயல்படுத்துதல், கோவை - பெங்களூரு இரவு நேர ரயில்’’ என பல வாக்குறுதிகளை வழங்கி, பி.ஆர்.நடராஜன் பிரச்சாரம் செய்கிறார்.

இவருக்கு ஆதரவாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, முத்தரசன், கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்துள் ளனர். திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, நா.கார்த்திக் எம்எல்ஏ, கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிர்வாகிகள் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

பாஜக வேட்பாளரான சி.பி.ராதா கிருஷ்ணன், மத்திய, மாநில அரசு களின் சாதனைகளையும், தான் வெற்றி பெற்றால் கோவைக்கு கொண்டுவர உள்ள புதிய திட்டங்க ளையும் மையப்படுத்தி வாக்கு சேகரிக்கிறார்.

‘‘ஜிஎஸ்டி முறையால் தொழில் துறை வளர்ச்சி அடைந்துள்ளது. ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி செய்யும் மையம் கோவைக்கு வர உள்ளது. சரக்கு வாகனங்களுக்கான சுங்கச்சாவடி பிரச்சினைகள் தீர்ந்துள் ளன. ஏற்கெனவே, கிரைண்டருக் கான ஜிஎஸ்டியை 28 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்க முயற்சி மேற்கொண்டு, அதில் வெற்றியும் பெற்றுள்ளேன். தொழில் துறையினரின் அனைத்து கோரிக்கை களும் நிறைவேறும். ஜவுளிப் பூங்கா, மேலும் ஒரு மருத்துவக் கல்லூரி என கோவைக்கு பல வசதிகள் வரும்’’ என்று சி.பி.ராதா கிருஷ்ணன் வாக்குறுதி வழங்கி வருகிறார்.

பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய, மாநில அமைச் சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர் கள், கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பிரச்சாரம் இவருக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close