[X] Close

பாஜக வேட்பாளருக்காக மோடியின் சகோதரர் ராமேசுவரத்தில் பிரச்சாரம்


  • kamadenu
  • Posted: 16 Apr, 2019 08:29 am
  • அ+ அ-

பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடியின் இளைய சகோதரர் பங்கஜ் மோடி ராமேசுவரத்தில் நேற்று வாக்கு சேகரித்தார்.

மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றியடைய வேண்டும் என வேண்டி, பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பங்கஜ் மோடி, ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் நேற்று முன்தினம் சுவாமி தரிசனம் செய்தார். அங்கு, ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மனை வழிபட்டார். முன்னதாக, கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

திங்கள்கிழமை மாலை மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இல்லத்தில் அவரது அண்ணன் முத்து மீரா மரைக்காயரை சந்தித்து நலம் விசாரித்தார்.

தொடர்ந்து ராமேசுவரத்தில் வாக்காளர்களிடம் தன்னை பிரதமர் மோடியின் சகோதரர் என்று அறிமுகம் செய்து கொண்டு, பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அவரது வருகையையொட்டி, ராமேசுவரத்தில் போலீஸார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close