[X] Close

வெளியாட்கள் தொகுதிகளைவிட்டு வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவு: தமிழகம், புதுவையில் இன்று பிரச்சாரம் ஓய்கிறது; விதிகளை மீறி பிரச்சாரம் செய்தால் 2 ஆண்டு சிறை, அபராதம்; வேட்பாளர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு


2

  • kamadenu
  • Posted: 16 Apr, 2019 07:21 am
  • அ+ அ-

தமிழகம், புதுச்சேரியில் மக்கள வைத் தேர்தல் மற்றும் 19 சட்டப் பேரவை இடைத்தேர்தலுகான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. அதன் பிறகு பிரச்சாரம் செய்தால் 2 ஆண்டு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரச்சாரம் முடிந் ததும் தொகுதிக்கு சம்பந்தமில் லாத வெளியாட்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதி களுக்கான பொதுத்தேர்தல் வரும் 18-ம் தேதி (நாளை மறுதினம்) நடக்கிறது. அத்துடன், தமிழகத் தில் காலியாக உள்ள 22 சட்டப் பேரவை தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கும் புதுச்சேரியில் ஒரு சட்டப் பேரவைத் தொகுதிக்கும் இடைத்தேர்தலும் நடக்கிறது. இதை யொட்டி கடந்த ஒரு மாதமாக தமிழகம் முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்களும் பிரச்சாரத்துக்கு வந்து சென்றனர்.

தேர்தல் விதிகளின்படி, வாக் குப்பதிவு முடியும் நேரத்துக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக பிரச்சாரம் உள்ளிட்ட நடவடிக்கை கள் நிறுத்தப்பட வேண்டும். அதன் படி, தமிழகத்தில் இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. அதைத் தொடர்ந்து நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடக்கிறது.

இது தொடர்பாக தமிழக தலை மைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் மக்களவை பொதுத் தேர்தல், சட்டப்பேரவை இடைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்.18-ம் தேதி காலை 7 முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது. மதுரை மக்களவைத் தொகுதிக்கு மட்டும் காலை 7 முதல் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும். இதை யடுத்து, 16-ம் தேதி (இன்று) மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடியும் வரை மக்கள் பிரதிநிதித்துவச் சட்ட விதிகள் அமலில் இருக்கும்.

இந்த நேரத்தில் தேர்தல் தொடர் பான எந்த ஒரு பொதுக்கூட்டத் தையோ, ஊர்வலத்தையோ ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ, பங்கேற்கவோ கூடாது. தேர்தல் விவகாரம் தொடர்பான எதையும் திரைப்படம், தொலைக்காட்சி, எப்எம் ரேடியோ, வாட்ஸ்அப், முகநூல், ட்விட்டர் போன்றவை வாயிலாக பொதுமக்களின் பார் வைக்கு வைக்கக் கூடாது. குறுஞ்செய்தி மற்றும் இணையம் உட்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடர்பையும் இது உள்ளடக்கும்.

மேலும், இசை நிகழ்ச்சி, திரை யரங்க செயல்பாடு, கேளிக்கை, பொழுதுபோக்கு நிகழ்ச்சி மூலம் பிரச்சாரம் செய்யக்கூடாது. இவற்றை மீறினால், மக்கள் பிரதி நிதித்துவச் சட்டப்படி 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்து தண்டனை யாக விதிக்கப்படும். தொகுதிக்கு வெளியில் இருந்து அழைத்து வரப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகி கள், கட்சிப் பணியாளர்கள், அத் தொகுதியின் வாக்காளர் அல்லா தோர் அனைவரும் 16-ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.

வாகன அனுமதிகள் செல்லாது

திருமண மண்டபம், சமுதாயக் கூடம், தங்கும் விடுதிகள், விருந் தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் யாரேனும் தங்கி யுள்ளார்களா என்பது கண்டறியப் படும். வேட்பாளர்களுக்கு வழங் கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உட்பட வாகன அனுமதிகள் அனைத் தும் மாலை 6 மணி முதல் செல்லாததாகி விடும்.

வாக்குப்பதிவு நாளன்று வேட் பாளர் அவரது பயன்பாட்டுக்கு ஒரு வாகனம், தேர்தல் முகவர் பயன்பாட்டுக்கான ஒரு வாக னம், ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கான அவரது பணி யாளர்கள் அல்லது கட்சிப்பணி யாளர்கள் பயன்பாட்டுக்கு ஒரு வாகனத்துக்கு தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இருந்து தனி அனுமதி பெற வேண்டும்.

வாக்காளர்களை வாக்குச் சாவடிக்கு அழைத்து வருவதற்கும், திரும்ப அழைத்துச் செல்வதற்கும் வேட்பாளர் அல்லது முகவர் வாகனத்தை வாடகைக்கு எடுக் கவோ, வாங்கவோ, பயன்படுத் தவோ அனுமதியில்லை. இதை மீறி நடந்தால் தண்டிக்கப்படுவர். அரசியல் கட்சிகளின் தற்காலிக அலுவலகம் வாக்குச் சாவடி யில் இருந்து 200 மீட்டர் தொலை வில் அமைக்கப்படலாம். தேவை யில்லாத கூட்டத்தை அவர்கள் அங்கு அனுமதிக்கக் கூடாது.

மேலும், இன்று மாலை 6 மணி முதல் ஏதேனும் கருத்துக்கணிப்பு அல்லது பிற வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உட்பட எந்தவொரு தேர்தல் விவகாரத்தையம் மின்னணு ஊடகங்களில் காட்சிப்படுத்துவது தடை செய்யப்படுகிறது. முன்னதாக கடந்த ஏப்.11-ம் தேதி முதல் மே 19-ம் தேதி மாலை 6.30 மணி வரை வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட ஏற்கெனவே தடை விதிக் கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

பிரச்சாரம் இன்று ஓய்வதை யடுத்து அரசியல் கட்சித் தலைவர் களும் வேட்பாளர்களும் இறுதிக் கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட் டுள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் பிரச்சார களம் விறு விறுப்படைந்துள்ளது.

காங்கிரஸ், அதிமுக, திமுகவின் 6 விளம்பரங்களுக்கு தடை: தலைமைத் தேர்தல் அதிகாரி நடவடிக்கை

அதிமுக, திமுக, காங்கிரஸ் கட்சிகள் சார்பில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் 6 விளம் பரங்களுக்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தடை விதித்துள்ளார்.

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, தேர்தல் பிரச்சாரத்தின்போது, கட்சித் தலைவர் அல்லது தொண்டர்கள் மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்களை தெரிவிக்கக் கூடாது.

இந்நிலையில் சமூக வலைதளங்கள், உள்ளூர் சேனல்கள், தொலைக்காட்சிகளில் விளம்பரங்கள், அதிக அளவில் வெளியாகி வருகின்றன.

புகார்களின் அடிப்படையில் ஆதாரமில்லாமல் வெளியாகும் 6 விளம்பரங்களுக்கு தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தடை விதித்துள்ளார்.

இதில், திமுக அளித்த புகாரின் பேரில், நேற்று முன்தினம் அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட ஊழல் தொடர்பான விளம்பரம், நில அபகரிப்பு, இலங்கை தமிழர் மற்றும் ‘ஒரு குடும்ப ஆட்சி’ என்ற தலைப்பில் வெளியான விளம்பரம் ஆகியவைகளும் தடை செய்யப்பட்டுள்ளன.

அதேபோல், அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் புகாரின்பேரில், காங்கிரஸ் கட்சி சார்பில் வெளி யிடப்பட்டு வரும் ‘இறந்த உடலை வைத்து, விவசாயி இறந்து போனது’ போல வரும் தொலைக்காட்சி விளம்பரம் மற்றும் திமுகவால் வெளியிடப்படும் ‘இந்து முஸ்லிம் கிறிஸ்தவ மதங்களை அடை யாளப்படுத்தும் விதமாக, மத சின்னங்களை அணிந்த 3 நபர்கள்’ வரும் விளம்பரம் ஆகிய வற்றையும் ஒளிபரப்ப தடை விதித்து தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். “இந்த விளம்பரங்களை தடையை மீறி மீண்டும் வெளி யிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close