[X] Close

ஹாட்லீக்ஸ் : பிரேமலதாவின் ‘குட்கா புகழ்’ பேச்சு!


  • kamadenu
  • Posted: 15 Apr, 2019 15:44 pm
  • அ+ அ-

 திருச்சியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளருக்கு வாக்குக் கேட்டு புதுக்கோட்டையில் பிரச்சாரம் செய்த பிரேமலதா, “அமைச்சர் விஜயபாஸ்கரை ‘குட்கா புகழ் விஜயபாஸ்கர்’ என மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பேசிட்டே வர்றாரு” என்று ஒரு வார்த்தையை எடுத்துவிட, ஒட்டுமொத்த அதிமுக வட்டாரமும் அப்செட்.

“என்னதான் ஸ்டாலின் அப்படிச் சொன்னாலும் நம்ம கூட்டத்துல வந்து நம்ம அமைச்சர பத்தி இவரே இப்படிப் பேசலாமா?” எனக் கொந்தளித்துக் கொடிபிடித்த விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள், அதற்குப் பிறகு வாக்குச் சேகரிப்பில் போதிய ஆர்வம் காட்டாமல் படுத்துவிட்டார்களாம்.

இதேபோல், திருச்சி பிரச்சாரத்தில் அதிமுக அமைச்சர்களை மதிக்காமல் வேனுக்குள் இருந்தபடியே பிரேமலதா பிரச்சாரம் செய்ததும் அதிமுக வட்டாரத்தை அதிருப்தியடைய வைத்திருக்கிறது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close