[X] Close

மறைமுகமாக சாடிய லாரன்ஸ்: வருத்தம் தெரிவித்த சீமான்


  • kamadenu
  • Posted: 15 Apr, 2019 12:58 pm
  • அ+ அ-

நடிகர் லாரன்ஸிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தான் செய்துவரும் சமூகப்பணிகளை சமூக வலைதளங்களில் இயங்கும் ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் தொடர்ந்து விமர்சித்து வருவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானையும் அவரது கட்சித் தொண்டர்களையும் மறைமுகமாக விமர்சித்து நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் நேற்று (ஏப்ரல் 14) அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது:

''நீங்கள் என்னைத் தவறாகப் பேசியதையும், அதற்கு நான் நாகரிகமாகப் பதில் சொன்னதையும், முடிந்துபோன ஒரு விஷயமாய் விடாமல், உங்களுடைய ஒரு சில தொண்டர்கள் எனது சேவை சம்பந்தப்பட்ட பதிவுகள் போடப்படும் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் போன்ற வலைதளங்களில் கமெண்ட்ஸ் என்கிற பெயரில் தப்புத்தப்பான வார்த்தைகளில் கொச்சையாகவும், அசிங்கமாகவும்  நாலாந்தர நடையில் பதிவிடுகிறார்கள்.

இறுதியாக ஒன்றை மட்டும் உறுதிபடக் கூறுகிறேன். எனக்கு எது நடந்தாலும் அதைத் தாங்கிக் கொள்வேன்! ஆனால், மாற்றுத்திறனாளிகளான என் பசங்களுக்கும் பாசமிக்க எனது ரசிகர்களுக்கும், ஏதாவது ஒரு சிறு தொந்தரவு ஏற்பட்டாலும்  என்னால் தாங்கிக்கொள்ள முடியாது''.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக சீமானிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்கும் போது, ''லாரன்ஸ் மீதும் அவருடைய சேவை மீதும் எப்போதும் எனக்கு மதிப்பு உண்டு. என் கட்சியைச் சார்ந்த யாராவது ஒருவர் புரிதல் இல்லாமல் விமர்சித்திருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் அவர் யாரென்று கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

எனக்கும் என் கட்சிக்கும் கெட்டபெயர் உண்டாக்கும் நோக்கத்தில் பலர் சமூக வலைதளங்களில் போலிக் கணக்குகளில் இயங்கி வருகின்றனர். அவர்கள் யாரேனும் கூட இப்படிச் செய்திருக்க வாய்ப்பு அதிகம். இருப்பினும் தம்பி லாரன்ஸிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார் சீமான்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close