[X] Close

மோடி உ.பி.யில் போட்டியிடும்போது நான் தேனியில் போட்டியிடக் கூடாதா?- ஈவிகேஎஸ் இளங்கோவன் கேள்வி


  • kamadenu
  • Posted: 15 Apr, 2019 11:45 am
  • அ+ அ-

குஜராத்தைச் சேர்ந்த மோடி உத்தரப் பிரதேசத்தில் போட்டியிடும்போது நான் தேனியில் போட்டியிடக் கூடாதா என்று தேனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரி வித்தார்.

இது குறித்து அவர் தேனியில் நேற்று கூறிய தாவது: பிரதமர் தேனிக்கு வந்தபோது வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகளில் ஆட்களை அழைத்து வந்தனர். அனுமதியின்றி இயக்கப்பட்ட இந்தப் பேருந்துகளை போக்குவரத்து அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். மணல் கடத்தலில் ஈடுபடுவோரைத்தான் வேட்பாளராக நிறுத்தி இருக்கிறார்கள். மோடி பேசும்போது, என்னை வெளி யூரில் இருந்து இங்கு வந்து போட்டியிடுவதாகக் கூறி இருக்கிறார். குஜராத்காரரான இவர் உத்தரப்பிரதேசத்தில் போட்டி யிடலாமா?. குஜராத்தில் இருந்து இங்கு வந்து ஓட்டுக் கேட்கலாமா?. ஜெயலலிதா ஆண்டிபட்டியில் போட்டி யிடவில்லையா?.

மோடியின் இப் பேச்சு இந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் எல். மூக்கையா, மாவட்ட காங்கிரஸ் தலைவர் முருகேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close