[X] Close

61 நாள் மீன்பிடி தடை இன்று முதல் அமல்; தூத்துக்குடியில் ஓய்வெடுக்கும் விசைப்படகுகள்: மீன்கள் விலை உயர வாய்ப்பு


61

  • kamadenu
  • Posted: 15 Apr, 2019 11:41 am
  • அ+ அ-

தூத்துக்குடி மாவட்டத்தில் 61 நாள் மீன்பிடி தடைக்காலம் இன்று (ஏப்.15) முதல் அமலுக்கு வருகிறது.

இருப்பினும் குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு நேற்றே விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டன. தடைகாலம் அமலுக்கு வந்துள்ளதால் மீன்கள் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட  கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஏப்ரல், மே,  ஜூன் மாதங்கள்மீன் உள்ளிட்ட கடல் உயிரிகளின் இனப்பெருக்க காலமாக மத்தியவேளாண் அமைச்சகம் கண்டறிந்துள்ளது. இந்த காலத்தில் மீன்கள் ஆழ்கடலில் முட்டையிட்டு, குஞ்சு பொரித்து இனவிருத்தி செய்யும் என கணிக்கப்பட்டுள்ளதால், கடலில்மீன் வளத்தை பெருக்கும் நோக்கத்தில், இக்காலகட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க  தடை விதிக்கப்பட்டு வருகிறது.

தமிழக கிழக்கு கடற்கரை பகுதிகளில் 45 நாட்களாக இருந்த மீன்பிடி தடைக்காலம் கடந்த  2017-ம் ஆண்டு முதல் 61 நாட்களாக அதிகரிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான 61 நாள் மீன்பிடி தடைக்காலம் இன்று (ஏப். 15) முதல் அமலுக்கு வருகிறது. ஜூன் 14-ம் தேதி வரை இந்த தடை அமலில் இருக்கும். மீன்பிடி தடைக்காலம் இன்று முதல் அமலுக்கு வந்தபோதிலும், நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், குருத்தோலை ஞாயிறு என்பதாலும் தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகுகள் நேற்று முதலே கடலுக்கு செல்லவில்லை.

இம்மாவட்டத்தில் தூத்துக்குடி, தருவைகுளம், வேம்பார், வீரபாண்டியன்பட்டினம் ஆகிய இடங்களில் சுமார் 400 விசைப்படகுகள் உள்ளன.  இந்த படகுகள் அடுத்த 61 நாட்களுக்கு  கடலுக்கு செல்லாது.  தடைக்காலத்தை மீனவர்கள் தங்களது படகுகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள பயன்படுத்திக்கொள்வார்கள்.  மீன்பிடி  தடை காரணமாக தமிழகத்தில் மீன்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close