[X] Close

இது சினிமாக்காரனுக்கு திரண்ட கூட்டம் இல்லை- வடசென்னையில் கமல்ஹாசன் பிரச்சாரம்


  • kamadenu
  • Posted: 15 Apr, 2019 08:51 am
  • அ+ அ-

என் பிரச்சாரத்துக்கு வருபவர்கள் எல்லாம் சினிமாக்காரனை பார்ப்பதற்காக திரண்டவர்கள் இல்லை என்பதை நிரூபியுங்கள். மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை வெற்றிபெறச் செய்யுங்கள் என்று கட்சித்தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

வட சென்னை மக்களவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம்கட்சி சார்பில் முன்னாள் காவல்துறை அதிகாரி ஏ.ஜி.மவுரியா போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன், ஓட்டேரி பகுதியில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள், வட சென்னை பகுதியை கவனிக்காமல் விட்டிருப்பது என் மனதை உலுக்குகிறது. நான்பிரச்சாரத்துக்கு போகும் இடங்களில் மக்களின் கண்களைப் பார்க்கும்போது, அரசுகள் மீதான கோபம் தெரிகிறது.

மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். அந்த மாற்றத்துக்கான விதையை தூவியே ஆகவேண்டும். அதற்கான தேதிதான் ஏப்ரல் 18.

தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இங்கு பிரிவினை பேசுவோருக்கு இடம்இல்லை. அப்படி பேசுவோர்நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள். எனது பிரச்சாரத்துக்குமக்கள் அதிக அளவில் வருகின்றனர். ஆனால், அவர்களை, சினிமாக்காரனை பார்ப்பதற்காக வந்திருக்கும் கூட்டம் என்று பலர் கூறி வருகின்றனர். சினிமாக்காரனை பார்க்க விரும்புவோர், கொஞ்சம் பணத்தை கொடுத்து,ஏசி தியேட்டரில் சொகுசாக உட்கார்ந்து, பார்த்து ரசித்திருப்பார்கள். கடும் வெயிலில் காத்திருந்து பார்க்க வேண்டிய அவசியம்இல்லை. இந்த கடும் வெயிலில்,நாளைய தமிழகம் பற்றி நான் பேசுவதை கேட்பதற்காகமக்கள் வருகிறார்கள். இவர்கள் அனைவரும் சினிமாக்காரனைபார்ப்பதற்காக வரவில்லை என்பதை நிரூபிக்க, மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும். தேர்தல் வெற்றி என்ற ஆயுதத்தைமக்கள் எங்களிடம் கொடுத்தால், உங்களுக்காக பணிபுரிவோம். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, திருவள்ளூர் (தனி)தொகுதி வேட்பாளர் லோகரங்கனை ஆதரித்து செங்குன்றத்திலும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளர் சிவக்குமாரை ஆதரித்து அம்பத்தூரிலும் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

‘காஞ்சனா 3’ உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close