[X] Close

கருணாநிதியின் மகள் செல்வி மீது வழக்கு


  • kamadenu
  • Posted: 15 Apr, 2019 08:45 am
  • அ+ அ-

திமுக சார்பில் மத்திய சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளராக தயாநிதி மாறன் நிறுத்தப்பட்டுள்ளார். இவருக்கு ஆதரவாக தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வி நேற்று முன்தினம் இரவு சூளைமேடு, இளங்கோவடிகள் தெரு பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். அவருடன் மேலும் 30 பேர் சென்றுள்ளனர்.

அப்போது, அதே பகுதியில் எஸ்டிபிஐ வேட்பாளரை ஆதரித்து அந்த கட்சியினரும் வாக்கு சேகரித்ததாகவும் அப்போது அவர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர், விலாசத்தை சரிபார்த்துக் கொண்டிருந்ததாகவும் இதை பார்த்த செல்வி அவர்களிடம் சென்று வாக்குவாதம் செய்து ஓட்டுக்கு பணம் எப்படி கொடுக்கலாம் என்று தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து எஸ்டிபிஐ கட்சியினர் சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்படி, செல்வி மற்றும் திமுக நிர்வாகி திருமலை உள்ளிட்டவர்கள் மீது போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close