[X] Close

பிரதமரை நாங்கள்தான் தேர்வு செய்வோம்: தினகரன் நம்பிக்கை


  • kamadenu
  • Posted: 15 Apr, 2019 08:39 am
  • அ+ அ-

தமிழகத்தில் பாஜக கூட்டணி தோல்வி அடையும் என தினகரன் கூறினார்.

வேலூர் மக்களவை தொகுதி அமமுக வேட்பாளர் பாண்டுரங்கன், ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளர் பாலசுப்பிரமணி ஆகியோரை ஆதரித்து ஆம்பூரில் டிடிவி தினகரன் நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

அப்போது, அவர் பேசியதாவது:தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் அமமுக எம்பிக்கள்தான் பிரதமரை தேர்வு செய்யப் போகிறார்கள். ரூ. 2 லட்சம் பணம் கொடுத்தாலும், மக்களுக்கு தெரியும் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்று. மோடியின் ஆட்சி முடிவுக்கு வரும் நேரம் நெருங்கி விட்டது. இந்த தேர்தல் மூலம் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அமமுக வெற்றி பெற்றால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என உறுதி அளிக்கிறோம்.

மக்களின் உண்மையான ஆதரவு அமமுகவுக்கு உள்ளது. திமுக சிறுபான்மை மக்களின் வாக்குகளை இழந்துவிட்டது. தமிழகத்தில் பாஜக ஒரு இடத்திலும் வெற்றி பெறாது. தமிழகத்தில் பாஜக கூட்டணி படுதோல்வி அடையும்.

ராகுல் காந்தி தன்னை பிரதமர் வேட்பாளர் எனக் கூறவில்லை. காங்கிரஸ் கட்சியும் அதை கூறவில்லை. ஸ்டாலின்தான் கூறுகிறார் என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close