[X] Close

பிரச்சாரத்துக்கு அனுமதி அளிப்பதில் பாரபட்சம் என புகார்; செந்தில்பாலாஜி, ஜோதிமணி உள்ளிருப்பு போராட்டம்


  • kamadenu
  • Posted: 15 Apr, 2019 08:25 am
  • அ+ அ-

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நாளை (ஏப்.16) நிறைவு பெறுகிறது. இதையொட்டி, கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே பிரச்சாரத்தை நிறைவு செய்ய திமுக கூட்டணியினர் திட்டமிட்டிருந்தனர்.

இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முயன்றபோது, விண்ணப்பிக்க அனுமதிக்கப்படும் நேரத்துக்கு முன்பே அதிமுகவினருக்கு அங்கு பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்த தாக தெரிகிறது. இதையடுத்து, திமுக மாவட்டப் பொறுப்பாளர் செந்தில்பாலாஜி நேற்று கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு சென்று அதிகாரிகள் பாரபட்சமாக நடந்து கொள்வதாக குற்றம்சாட்டி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

தகவலறிந்த காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியும் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டார். 3 மணி நேரமாக போராட்டம் தொடர்ந்த நிலையில், அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், பேருந்துநிலைய ரவுண்டானா அருகே பிரச்சாரம் செய்ய திமுக கூட்டணிக்கு மாலை 4 முதல் 6 மணி வரையும், அதிமுக கூட்டணிக்கு பிற்பகல் 12 முதல் 2 மணி வரையும் நேரம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து உள்ளிருப்புப் போராட்டம் முடிவுக்கு வந்தது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close