[X] Close

பாலியல் கொடுமை?- மாணவி தற்கொலை


  • kamadenu
  • Posted: 15 Apr, 2019 08:20 am
  • அ+ அ-

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயதான மாணவி 10-ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வை எழுதியிருந்தார். இந்நிலையில், ஏப்.12-ம் தேதியன்று மாணவியின் பெற்றோர், உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்றிருந்தனர். அப்போது அந்த மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

மாலையில், பெற்றோர் வீடு திரும்பியபோது, அழுது கொண்டிருந்த அவர், திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

முன்னதாக கூத்தாநல்லூர் போலீஸார் மாணவியிடம் வாக்குமூலம் பெற்றனர். அதே கிராமத்தைச் சேர்ந்த 4 இளைஞர்கள் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்ததால் தான், அந்த மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அந்த 4 இளைஞர்களும் தலைமறைவாகிவிட்டனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close